8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் மனிதர்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
8 மனைவிகளுடன் ஒரே வீட்டில் வசிக்கும் மனிதர்

தாய்லாந்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் ஒரே வீட்டில் 8 மனைவிகளுடன் வாழ்ந்து வருவது ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. 

தாய்லாந்தைச் சேர்ந்தவர் ஓங் டாங் சோரூட், டாட்டூ கலைஞரான இவர் 8 பேரை மணந்து அவர்களுடன் ஒரே வீட்டில் ஒன்றாக எந்த வித சண்டையும் இல்லாமல் வாழ்ந்து வருகிறார். அத்தனை மனைவிகளும் சோரூட் மீது மிகுந்த காதலுடனும், இருக்கின்றனர். சோரூட் தனது 8 மனைவிகளிடமும் பார்த்த இடத்திலேயே காதலில் விழுந்துள்ளார். 

இவரது முதல் மனைவி நாங் ஸ்பெரிட் என்பவரை ஒரு நண்பரின் திருமணத்தில் பார்த்துள்ளார். அவரை திருமணம் செய்த பிறகு இரண்டாவது மனைவி நாங் எல்லை மார்கெட்டில் பார்த்துள்ளார். நாங் எல்லிற்கு சோரூட்டின் முதல் திருமணம் குறித்து தெரியும் முன்பே அவரை திருமணம் செய்துவிட்டார். 

மூன்றாவது மனைவியை மருத்துவமனையிலும், நான்கு, ஐந்து மற்றும் ஆறாவது மனைவியை சமூகவலைத்தளங்களாக இன்ஸ்டாகிராம், பேஸ்புக் மற்றும் டிக்டாக்கில் பார்த்தும் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவரது 7வது மனைவியை அவரது தாயுடன் கோவிலுக்கு செல்லும் போது பார்த்துள்ளார். 

அவரது எட்டாவது மனைவியை மற்ற மனைவிகளுடன் விடுமுறையை கழிக்க சென்ற இடத்தில் பார்த்துள்ளார். அத்தனை மனைவிகளுடனும் தற்போது ஒரே வீட்டில் ஒன்றாக தான் வாழ்ந்து வருகிறார். இதில் அதிசயம் என்னவென்றால் அவர்களுக்குள் சண்டையே வருவது இல்லையாம்.

 அதற்கு முக்கியமான காரணம். சோரூட்டின் குணம் தான் என சொல்லப்படுகிறது அத்தனை மனைவிகள் மீதும் பாரபட்சமின்றி அன்பை காட்டுவாராம். 

ஏற்கனவே திருமணமான நபரை ஏன் திருமணம் செய்தீர்கள் என அவரது மனைவிகளிடம் கேட்ட போது அவர்கள் அளித்த ஒரே பதில் "அவர் மீது தீராத காதல் வந்துவிட்டது" என்பது தானாம். இரவில் தூங்கும் போது தினமும் ஒவ்வொருவருடன் தனது நேரத்தினை செலவிடுவாராம். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/7CmdcRYGJ
https://ift.tt/F25iM8glm

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.