நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும்.

இலங்கையில் முதலீடு செய்ய வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு அழைப்பு விடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச , தற்போதைய நெருக்கடியை சமாளிக்க நாட்டின் சகலரும் தியாகங்களைச் செய்யத் தயாராக இருக்க வேண்டும் என்றும் தேசிய சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி மேலும் கூறியதாவது , நாட்டில் மத ,ஊடக சுதந்திரம் இருக்கின்றது.கருத்து சுதந்திரம் இருக்கின்றது.

பொறுப்புகளை நிறைவேற்றாமல் எவரும் உரிமைகளை பற்றி பேசக்கூடாது.அரசியல் , பொருளாதாரம் நாட்டில் பலமாக இருக்க வேண்டும்.நாட்டின் தலைவர் ஒருவர் , பிரச்சினைகளை தினசரி எதிர்நோக்கவேண்டியுள்ளது.

 ஒரு இலக்கை நோக்கி செயற்படுவது இலக்கல்ல.சிலசமயம் உள்நாட்டு வெளிநாட்டு சக்திகள் எமக்கு எதிராக செயற்படுகின்றன.மக்கள் இவற்றை புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் நாட்டின் சவால்களை எதிர்கொள்ள நான் தயாராக இருக்கிறேன்.சிறந்த நிலைப்பாடுகளால் நாம் நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல வேண்டும். இதன்படி ,புதிய உலகத்துடன் நாம் போட்டியிட வேண்டுமானால் நாம் நம் மீது நம்பிக்கை வைக்க வேண்டும்.

கடினமான காலம் என்றென்றும் நீடிக்காது, கடினமான காலங்களை எதிர்கொள்ள வலிமையானவர்கள் தேவை. அதனால் மற்றவர்களை மனதளவில் புண்படுத்தும் யாரும் சமுதாயத்திற்கு எந்த உதவியும் செய்வதில்லை. 

நாம் சந்திக்கும் பிரச்சனைகள் நீண்ட கால பிரச்சனைகள் அல்ல. அதற்கமைய பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாதென கூறப்பட்டது.ஆனால் நாங்கள் வென்றோம்.நாங்கள் எமது சவால்களை வெல்ல திடசங்கற்பம் பூண வேண்டும்.அர்ப்பணிப்பு, தியாகங்களை செய்யவேண்டும்.

நாட்டை பாதுகாக்கும் தலைவர்கள் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை மக்கள் நிராகரிக்க வேண்டும். எந்தவொரு காரணத்திற்காகவும் அடிப்படைவாதம் மீண்டும் தலைதூக்க அனுமதிக்கப்படமாட்டாது.கடந்த காலங்களில் சவால்கள் சமாளிக்கப்பட்டது போன்று அடுத்த வருடங்களிலும் நாம் சவால்களை வெல்வோம். – என்றார் ஜனாதிபதி 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்

 #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/jiWyATdGe
https://ift.tt/SuhZ4Ef8z

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.