மீண்டும் பெற்றோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பு - அமைச்சர் உதய கம்மன்பில.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
எதிர்வரும் நாட்களில் எரிபொருட்களுக்கானத் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய நிலை காணப்படுவதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லை பகுதியில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துரைத்த போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, 37, 300 மெற்றிக் டன் பெற்றோல் அடங்கிய கப்பல் ஒன்று நேற்று நாட்டை வந்தடையவிருந்தது.
அத்துடன் இன்றைய தினம் 37, 500 மெற்றிக் டன் அடங்கிய கப்பல் ஒன்று நாட்டை வந்தடையவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்ய முடியும் என வலுசக்தி அமைச்சு அறிவித்திருந்தது.
எவ்வாறாயினும் பத்தரமுல்லையில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கருத்துரைத்த வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனத் தொடர்ந்தும் உறுதியளிக்க முடியாத நிலை உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதமும் ஜூன் மாதமும் தெரிவித்த விடயங்கள் தற்போது உறுதியாகியுள்ளன. இன்று பொருளாதார சிக்கலை எதிர்நோக்க நேரிட்டுள்ளது.
இதற்கான தீர்வு தொடர்பில் ஆராயப்பட வேண்டும் எனப் பெப்ரவரி மாதம் 6ஆம் திகதி அறிவித்தேன். இதுவரையில் அது தொடர்பான கலந்துரையாடல் அரசாங்கத்துக்குள்ளும் நாட்டிலும் இடம்பெறவில்லை எனவும் வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/LVDIWKz
https://ift.tt/f6ey0AC
https://ift.tt/f6ey0AC
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.