வரலாற்றில் இன்று மார்ச் 29.2022

 வரலாற்றில் இன்று மார்ச் 29.2022

மார்ச் 29  கிரிகோரியன் ஆண்டின் 88 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 89 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 277 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

845 – பாரிசு நகரம் வைக்கிங்குகளினால் சூறையாடப்பட்டது. 

1461 – ரோசாப்பூப் போர்கள்: யோர்க் இளவரசர் எட்வர்ட் டௌட்டன் என்ற இடத்தில் நடந்த சமரில் மார்கரெட் மகாராணியைத் தோற்கடித்து, இங்கிலாந்தின் நான்காம் எட்வர்ட் மன்னரானார். 

1632 – கியூபெக் ஆங்கிலேயரிடம் இருந்து பிரெஞ்சுக்களிடம் கைமாறியது.

1792 – 13 நாட்களின் முன்னால் சுடப்பட்ட சுவீடனின் மூன்றாம் குஸ்தாவ் மன்னர் இறந்தார்.

1807 – 4 வெஸ்டா என்ற இதுவரை அறிந்தவற்றில் மிக வெளிச்சமான சிறுகோளை செருமானியய வானியலாளர் ஐன்ரிக் ஓல்பர்சு கண்டுபிடித்தார்.

1809 – சுவீடன் மன்னர் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் இராணுவப் புரட்சியை அடுத்து பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1831 – துருக்கிக்கு எதிராக பொசுனிய எழுச்சி ஆரம்பமானது.

1847 – மெக்சிக்கோ-அமெரிக்கப் போர்: அமெரிக்கப் படைகள் வேராகுரூசு நகரை முற்றுகையிட்டுக் கைப்பற்றினர்.

1849 – பஞ்சாபை பிரித்தானியா கைப்பற்றியது.

1857 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் வங்காள இராணுவத்தைச் சேர்ந்த சிப்பாய் மங்கள் பாண்டே பிரித்தானிய ஆட்சிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார். இதுவே பின்னர் இந்திய விடுதலைப் போருக்கு முன்னோடியாக அமைந்தது.

1867 – கனடாக் கூட்டமைப்பை சூலை 1 இல் உருவாக்குவதற்கான பிரித்தானிய வட அமெரிக்க சட்டத்தை பிரித்தானியாவின் விக்டோரியா மகாராணி அரச ஒப்புதலை அளித்தார்.

1879 – ஆங்கில-சூலூ போர்: தென்னாபிரிக்காவில் கம்பூலா என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள் 20,000 சூலுக்களை வென்றனர்.

1886 – அமெரிக்காவின் அட்லான்டா நகரில் ஜோன் பெம்பேர்ட்டன் என்பவர் முதல் தொகுதி கொக்கக் கோலா மென்பானத்தைத் தயாரித்தார்.

1945 – இரண்டாம் உலகப் போர்: செருமனியின் நான்காம் பிரிவு இராணுவம் சோவியத் செஞ்சேனையினால் முற்றாக அழிக்கப்பட்டது.

1945 – இரண்டாம் உலகப் போர்: வி-1 பறக்கும் வெடிகுண்டு கடைசித் தடவையாக இங்கிலாந்தைத் தாக்கியது.

1947 – மடகாசுகரில் பிரான்சிய குடியேற்ற ஆட்சிக்கெதிராக மலகாசி எழுச்சி ஆரம்பமானது.

1961 – வாசிங்டன், டி. சி. மக்கள் அரசுத்தலைவர் தேர்தலில் வாக்களிக்க அனுமதிக்கும் சட்டம் அமெரிக்காவில் நிறைவேற்றப்பட்டது.

1962 – அர்கெந்தீனாவின் அரசுத்தலைவர் அர்த்தூரோ புரொந்தீசி இராணுவப் புரட்சி ஒன்றில் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.

1971 – மை லாய் படுகொலைகள்: அமெரிக்காவின் லெப்டினண்ட் வில்லியம் கலி என்பவன் கொலைக் குற்றம் சாட்டப்பட்டு ஆயுள் தண்டனை பெற்றான்.

1973 – வியட்நாம் போர்: அமெரிக்கப் படைகள் தெற்கு வியட்நாமை விட்டு முற்றாக வெளியேறினர்.

1973 – அமெரிக்காவின் லாவோஸ் மீதான குண்டுத்தாக்குதல்கள் முடிவுக்கு வந்தது.

1974 – நாசாவின் மரைனர் 10 விண்ணுளவி புதன் கோளை அண்மித்த முதலாவது விண்கலம் என்ற பெயரைப் பெற்றது.

1974 – சீனாவின் சென்சி மாகாணத்தில் சுடுமட்சிலைப் படை சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

1999 – உத்தரப் பிரதேசம், சமோலியில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 103 பேர் உயிரிழந்தனர்.

2004 – பல்காரியா, எசுத்தோனியா, லாத்வியா, லித்துவேனியா, உருமேனியா, சிலோவாக்கியா, சுலோவீனியா ஆகிய நாடுகள் நேட்டோ அமைப்பில் முழுமையான அங்கத்துவம் பெற்றன.

2007 – கணிதத்தில் நோபல் பரிசு எனப்படும் நோர்வே நாட்டின் ஏபல் பரிசு தமிழரான சீனிவாச வரதனுக்கு அறிவிக்கப்பட்டது.

2008 – பூமி மணித்தியாலம் அனைத்துலக மயப்படுத்தப்பட்டது.

2010 – மாஸ்கோ மெட்ரோ தொடருந்து நிலையத்தில் இரண்டு தற்கொலைக் குண்டுகள் வெடித்ததில் 40 பேர் கொல்லப்பட்டனர்.

2013 – தன்சானியா, தாருசலாம் நகரில் 16-மாடிக் கட்டடம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 36 பேர் உயிரிழந்தனர்.

2014 – ஐக்கிய இராச்சியத்தில் முதலாவது ஒருபால் திருமணங்கள் இங்கிலாந்து, வேல்ஸ் ஆகிய இடங்களில் நடத்தப்பட்டன.

இன்றைய தின பிறப்புகள்

1790 – ஜான் டைலர், அமெரிக்காவின் 10-வது அரசுத்தலைவர் (இ. 1862)

1869 – எட்வின் லூட்டியன்சு, பிரித்தானிய கட்டிடக் கலைஞர் (இ. 1944)

1885 – பா. தாவூத் ஷா, தமிழக இதழாசிரியர், எழுத்தாளர், சீர்திருத்தவாதி, சொற்பொழிவாளர் (இ. 1969)

1918 – சாம் வோல்ற்றன், வோல் மார்ட்டை நிறுவிய அமெரிக்கத் தொழிலதிபர் (இ. 1992)

1930 – அனெரூட் ஜக்நாத், மொரீசியசின் 4வது குடியரசுத் தலைவர்.

1946 – ராபர்ட் ஷில்லர், அமெரிக்க பொருளாதார வல்லுனர், எழுத்தாளர்.

இன்றைய தின இறப்புகள்

கிமு 87 – ஆனின் பேரரசர் வு, சீனப் பேரரசர் (பி. கிமு 156)

1629 – இரண்டாம் ஜேகப் டி கெயின், டச்சு ஓவியர் (பி. 1565)

1891 – யோர்ச் சோரா, பிரான்சிய ஓவியர் (பி. 1859)

1909 – டபிள்யூ. ஜி. ரொக்வூட், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, மருத்துவர் (பி. 1843)

1946 – ஜார்ஜ் வாசிங்டன், பெல்ஜிய-அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (பி. 1871)

1965 – தமிழ்ஒளி, புதுவைக் கவிஞர் (பி. 1924)

1971 – பாலூர் து. கண்ணப்பர், தமிழகத் தமிழறிஞர், எழுத்தாளர், உரையாசிரியர் (பி. 1908)

1977 – யூஜீன் வூசுட்டர், ஆத்திரியத் தொழிலதிபர், கலைச்சொல்லியலாளர் (பி. 1898)

1985 – ஜார்ஜ் பீட்டர் மர்டாக், அமெரிக்க மானிடவியலாளர் (பி. 1897)

1997 – பூபுல் செயகர், இந்தியப் பெண் எழுத்தாளர், செயல்பாட்டாளர் (பி. 1915)

2000 – சி. கே. சரஸ்வதி, தமிழ்த் திரைப்பட நடிகை.

2007 – சுப்புடு, தமிழக இசை, நடன விமர்சகர்

.இன்றைய தின சிறப்பு நாள்

1947 கிளர்ச்சி நினைவு நாள் (மடகாசுகர்)

இளைஞர் நாள் (சீனக் குடியரசு)


 

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.