ஜடேஜாவின் சுழலில் சுருண்ட இலங்கை இலங்கை
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 ஜடேஜாவின் சுழலில் சுருண்ட இலங்கை இலங்கை
மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸ் நிறைவில் 174 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
மற்றும் இந்தியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸ் நிறைவில் 174 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தனது முதலாவது இன்னிங்ஸில் 8 விக்கெட்டுக்களை இழந்து 574 ஓட்டங்களைப் பெற்றிருந்த போது ஆட்டத்தை இடைநிறுத்தியது.
இந்திய அணி சார்பில் ஆட்டமிழக்காமல் துடுப்பெடுத்தாடிய ரவீந்திர ஜடேஜா 175 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார். ரிசப் பந்த் 96 ஓட்டங்களையும், ரவிச்சந்திரன் அஷ்வின் 61 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லசித் எம்புல்தெனிய, சுரங்க லக்மால் மற்றும் விஷ்வ பெர்ணான்டோ ஆகியோர் தலா இரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
அதனடிப்படையில் தனது முதல் இன்னிங்சில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 174 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
துடுப்பாட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பெத்தும் நிஸ்ஸங்க அதிகபட்டமாக ஆட்டமிழக்காமல் 61 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்களை வீழ்த்தியிருந்தார்.
அதனடிப்படையில் இலங்கை அணி 400 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://api.whatsapp.com/send?phone=94781001021&text=உங்கள்+Group+ல்+இணைய+விரும்புகிறேன்
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/m0g1fXn
https://ift.tt/8fY0E5n
https://ift.tt/8fY0E5n
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.