அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டம்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் இன்று சுகவீன விடுமுறை போராட்டம்.
அரச துறையில் பட்டதாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் இன்று சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
அரச துறையில் பட்டதாரிகளின் சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவை சங்கம் இன்று சுகவீன விடுமுறைப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளது.
அதிகாரிகள் தமது பிரச்சினைகளைத் தீர்க்கும் வரை தொழிற்சங்கப் போராட்டம் தொடரும் என ஒன்றியத்தின் தலைவரான சந்தன சூரிய ஆராச்சி தெரிவித்தார்.
பொது மக்களுக்கு சுமையாக உள்ள நிலையில், நிலவும் நெருக்கடிகளை நிர்வகித்து முன்னு தாரணமாக விளங்கும் அதிகாரிகள் தியாகங் களைச் செய்வதற்கு தொழிற்சங்கம் பொறுமையுடன் காத்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும், அதிகாரிகள் தியாகங்களைச் செய்யத் தவறினால், நிலவும் சூழ்நிலையை நிர்வகிக்கத் தவறினால் அல்லது நாட்டை ஆதரவற்ற நிலைக்குத் தள்ளுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறினால், தொழிற்சங்கம் அவர்களின் கோரிக்கைகள் குறித்து தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
அதிகாரிகள் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறினால், பாரிய எதிர்ப்புப் பிரசாரங்கள் மற்றும் காலவரையற்ற வேலைநிறுத்தங்கள் போன்ற தொழிற்சங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு வரப்போவதாகவும் அவர் எச்சரித்தார். இன்றும் மாவட்ட மட்டத்தில் பாரிய போராட் டங்கள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/ZylbLW6 https://ift.tt/XAT7UjN #TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/RCkgLY6
https://ift.tt/oSw2isK
https://ift.tt/oSw2isK
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.