எரிபொருள் வழங்குவது தொடர்பில் புதிய கட்டுப்பாடு - அமைச்சர் அறிவிப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
எரிபொருள் வழங்குவது தொடர்பில் புதிய கட்டுப்பாடு - அமைச்சர் அறிவிப்பு
கொழும்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாவட்டத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல் விநியோகத்திற்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மட்டுமே வழங்க வேண்டும் என எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார்.
தற்போது கொழும்பில் எரிபொருள் விநியோகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் உள்ள ஒவ்வொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் வாகனம் ஒன்றிற்கு 10 லீற்றருக்கு மேல் டீசல் வழங்க கூடாதென இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இறுதியாக வந்த கப்பலிலுள்ள டீசலை சபுகஸ்கந்தவில் சேமித்து வைக்க முடியாததே இந்தப் பிரச்சினைக்குக் காரணம் என அவர் தெரிவித்துள்ளார். போக்குவரத்து நெரிசல் காரணமாக டீசல் கப்பலில் இருந்த டீசலை முத்துராஜவெலயில் இறக்க வேண்டிய நிலை ஏற்பட்டதுடன், இந்த நிலையிலேயே இந்த பிரச்சினை உருவாகியுள்ளது.
எரிபொருள் கொண்டு செல்லும் லொறி ஓட்டுநர்களின் வேலைநிறுத்தம் விநியோக வலையமைப்பையும் சீர்குலைத்துள்ள நிலையில், விநியோகத்தை சீரான முறையில் முன்னெடுக்க இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/tOQ4LXo https://ift.tt/c8yoMhe #TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/xdToqrW
https://ift.tt/IL9Uej1
https://ift.tt/IL9Uej1
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.