தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
தனியார் பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!

நாட்டில் எதிர்வரும் நாட்களில் தூர பிரதேச தனியார் பேருந்து சேவையினையும் ஒப்பீட்டளவில் மட்டுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜயரத்ன (Gemunu Wijeratne) தெரிவித்துள்ளார். 

அதன்படி எரிபொருள் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் வரை தனியார் பேருந்து சேவை இவ்வாறு மட்டுப்படுத்தப்படும் என தெரிவித்துள்ளார். 

அவர் இது தொடர்பாக மேலும் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் தீவிரமடைந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக தனியார் பேருந்து சேவையாளர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்க்கொண்டுள்ளார்கள்.

 தற்போது, 20 சதவீதமான பேருந்துகள் மாத்திரமே சேவையில் ஈடுபடுத்தப்படுகிறது. தற்போது அதிகரிக்கப்பட்டுள்ள பேருந்து கட்டண அதிகரிப்பு எரிபொருள் விலையினை முகாமைத்துவம் செய்யும் வகையில் அமையாது. சிசெட்கோ எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தனியார் பேருந்துகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாறு ஆரம்பத்தில் குறிப்பிடப்பட்டது, ஆயினும் அது நடைமுறைக்கு சாத்தியமற்றதாக காணப்படுகிறது. 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான டிபோக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்படவில்லை. 

ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வு காணும் வரை தனியார் பேருந்து சேவைக்கு எரிபொருளை விநியோகிப்பதற்கு பிரத்தியேக நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு வலியுறுத்தியுள்ளோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/uWe2V7h https://ift.tt/KYchlVJ #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/O6tC1S9
https://ift.tt/zCXmaKp

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.