நவம்பர் முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
நவம்பர் முதல் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டைகள்! 

இந்தியாவின் நிதியுதவியுடன் நாட்டில் டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத் துவதற்கான ஒப்பந்தம் இன்று அமைச்சர வையின் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும் என தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விஜயத்தின் போது இந்த ஒப்பந்தம் கைச்சாத்தி டப்படும் என அமைச்சின் செயலாளரான ஜயந்த டி சில்வா தெரிவித்துள்ளார். 

டிஜிட்டல் மயமாக்கல் திட்டத்தை நடைமுறைப் படுத்துவதற்காக இலங்கைக்கு 8 மில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கு இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 இதற்கான உடன்படிக்கையில் கைச்சாத்தி டுவதற்கான அமைச்சரவை அங்கீகாரம் அண்மையில் வழங்கப்பட்டது. பயோமெட்ரிக் தகவல் மூலம் குடிமக்களை அடையாளம் காண்பதை எளிதாக்குவதை இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.

 இந்த வருடம் நவம்பர் மாதம் முதல், பிரஜை களுக்கான டிஜிட்டல் தேசிய அடையாள அட்டையை அறிமுகப்படுத்த எதிர்பார்த்துள்ள தாக அமைச்சின் செயலாளர் மேலும் குறிப்பிட்டார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/qvIV4dz https://ift.tt/cBIFHQG #TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/BU7WaIh
https://ift.tt/RSveiZ8

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.