வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் உள்ள வசதி என்ன?

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
வாட்ஸ்அப் புதிய அப்டேட்டில் உள்ள வசதி என்ன?

வாட்ஸ்அப் செயலியை விட டெலிகிராம் செயலியில் இருக்கும் ஒரு கூடுதல் சிறப்பம்சம் என்னவென்றால் டெலிகிராமில் 1.5 GB வரையிலான ஃபைல்களை அனுப்ப முடியும். 

வாட்ஸ்அப் செயலியில் வெறும் 100MB வரையிலான ஃபைல்களைத்தான் அனுப்ப முடியும். இதனால் வாட்ஸ்அப்பில் பெரிய அளவிலான கோப்புகளை அனுப்பமுடியாமல் பயனர்கள் சிரமப்பட்டு வந்தனர். 

இந்நிலையில் தற்போது வாட்ஸ்அப் 2GB வரையிலான கோப்புகளை அனுப்பும் வசதியை தனது அடுத்த அப்டேட்டில் கொண்டுவரவுள்ளது. 

இந்தப் புதிய அம்சம் தற்போது ஆப்பிள் iOS தளத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இது தொடர்பான தகவல்களும் புகைப்படங்களும் கசிந்துள்ளன. 

இந்தச் சோதனை தற்போது அர்ஜென்டினாவில் உள்ள iOS பயனர்களிடம் நடத்தப்படுகிறது. விரைவில் இந்தப் புதிய அப்டேட் உலகம் முழுவதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளத்தில் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் வாட்ஸ்அப் சாட்டை (chat) ஐபோனிலிருந்து ஆண்ட்ராய்டுக்கு பேக்கப் எடுத்து மாற்றும் புதிய அப்டேட்டும் வரவுள்ளது. இதன் ஒரு பகுதியாக வாட்ஸ்அப் சேட்டை ஐ-போனிலிருந்து சாம்சங் போன்களுக்கு மாற்றும் அனுமதியை வழங்கியுள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

இதற்கான அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 
👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/7U2CEcA https://ift.tt/ohIV4E8 

#TELEGRAM_CHANNEL 

👇👇👇 https://ift.tt/uDlAzPR
https://ift.tt/9y2MKta

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.