பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது! -
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
பெரும் பரபரப்புக்கு மத்தியில் நாடாளுமன்றம் இன்று கூடுகின்றது!
அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால் அரசாங்கம் இன்று (05) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அதே வேளையில் 113 ஆசனங்களின் தனிப்பெரும்பான்மையையும் இழக்க நேரிடலாம் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அரசாங்கத்திற்கு காத்திருக்கும் சவால் அரசாங்கம் இன்று (05) நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை இழக்கும் அதே வேளையில் 113 ஆசனங்களின் தனிப்பெரும்பான்மையையும் இழக்க நேரிடலாம் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இது குறித்து கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பெருமளவான அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இன்று நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து அரசாங்கத்திலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்றைய நாடாளுமன்ற கூட்டத்தொடர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக அமையும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் 50 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்பட்டு அரசாங்கத்தின் 113 பெரும்பான்மையை இழக்க நேரிடும் என முன்னாள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பில் நேற்று (04) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/KBL4PrX https://ift.tt/SzogNUs
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/M1XSyIB
https://ift.tt/0T54fJB
https://ift.tt/0T54fJB
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.