கோதுமை மாவின் விலையை உயர்த்த தயாராகும் நிறுவனங்கள்!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
கோதுமை மாவின் விலையை உயர்த்த தயாராகும் நிறுவனங்கள்!

ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை மேலும் 50 ரூபாவினால் அதிகரிக்க கோதுமை மா நிறுவனங்கள் தயாராகி வருவதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

கோதுமை மா நிறுவனங்கள் அண்மையில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலையை 35 ரூபாவினால் அதிகரித்தன. 

இன்றைய நாட்களில் ஒரு கிலோ கோதுமை மாவின் விலை 180 ரூபாவாக உள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே. ஜயவர்தன தெரிவித்தார்.

 பேக்கரி மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக ஒரு கிலோ கேக்கின் விலை 1000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 

ரொட்டி உள்ளிட்ட பேக்கரி பொருட்கள் 50 சதவீதம் குறைந்துள்ளதாகவும் தற்போது பல சிறிய பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

 சில பேக்கரி உரிமையாளர்கள் மீன் ரொட்டியை 120 ரூபாய்க்கும், ஒரு சாண்ட்விச் 250 ரூபாய்க்கும் விற்பனை செய்வதால், பேக்கரி தொழிலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 

ஒரு கிலோ சீனியின் விலை 250 ஆகவும், ஒரு லீற்றர் தேங்காய் எண்ணெய் ரூ.1100 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/A0G6ZXo https://ift.tt/uA3iNOG

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/mTMZyj8
https://ift.tt/oANk2Cn

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.