நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை : களமிறங்க தயாராகும் முப்படையினர்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
 நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நிலை : களமிறங்க தயாராகும் முப்படையினர்

நாட்டில் நிலவும் தற்போதைய நிலைமையை கருத்திற்கொண்டு தேவை ஏற்படும் சந்தர்ப்பங்களில் பொலிஸாருக்கு முப்படையினரின் உதவிகளை வழங்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு அமைச்சிடம் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு இந்த கோரிக்கையை விடுத்துள்ளது. 

ஏற்பாடு செய்யும் போராட்டங்களை அமைதியான முறையில் முன்னெடுக்குமாறு பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் ஜகத் டி அல்விஸ் அனைத்து தரப்பினரிடமும் கோரிக்கை விடுத்துள்ளார். 

 இதேவேளை, நேற்று கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்த மேலதிக பொலிஸ் குழுக்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.

 சமகால அரசாங்கத்திற்கு எதிராக நாடு முழுவதும் பொது மக்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக வேண்டும் என்பது இவர்களின் பிரதான கோரிக்கையாகும். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/uA2jYLm https://ift.tt/fpTeQwJ 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/Jyn68Gb
https://ift.tt/vAzsyl3

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.