அரச விடுமுறை - அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
அரச விடுமுறை - அத்தியாவசிய சேவைகளுக்கு தடையாகக் கூடாது!

நாளை (11) மற்றும் நாளை மறுதினம் (12) அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி அறிவித்துள்ளார்.

 இதேவேளை, வங்கிச் சேவைகள் நாளையும் நாளை மறுதினமும் இடம்பெறும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. 

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு 11 ஆம், 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும், மக்களின் வசதி கருதி குறித்த தினங்களில் வங்கிகள் வழமை போன்று செயற்படும் என்றும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது. 

இதேவேளை, நாளையும் நாளை மறுதினமும் அரச விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளமை அரசாங்கத்தின் அத்தியாவசிய சேவைகளை கொண்டு நடத்துவதற்கு தடையாக அமையக்கூடாது என்றும் பொது சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஜே.ஜே. ரத்னசிரி மேலும் அறிவித்துள்ளார். (அரசாங்க தகவல் திணைக்களம்) 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/uA2jYLm https://ift.tt/fpTeQwJ 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/Jyn68Gb
https://ift.tt/vAzsyl3

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.