நாட்டில் பாரிய அபாய நிலைமை ஏற்படலாம்! எச்சரிக்கை தகவல்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
நாட்டில் பாரிய அபாய நிலைமை ஏற்படலாம்! எச்சரிக்கை தகவல்.
இலங்கையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என முன்கூட்டியே தெரிவித்ருந்தபோதும் சுகாதார அதிகாரிகள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்து வந்தனர்.
இலங்கையில் மருந்து பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என முன்கூட்டியே தெரிவித்ருந்தபோதும் சுகாதார அதிகாரிகள் அது தொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்து வந்தனர்.
அதனால் இந்த நிலை தொடர்ந்தால் எதிர்வரும் மூன்று மாதங்களில் பாரிய நிலைமை ஏற்படும் அபாயம் இருப்பதாக இலங்கை மருத்துவ சங்கம் உட்பட வைத்திய நிபுணர்கள் அறிவித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகள் தொடர்பான வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வைத்தியர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாட்டில் ஏற்படப்போகும் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக பல சந்தர்ப்பங்களில் அதிகாரிகளை அறிவிறுத்திய போதும் அந்த சந்தர்ப்பங்களில் எல்லாம் அவர்கள் அதுதொடர்பில் நடவடிக்கை எடுக்காமல் மெளனம் காத்து வந்தார்கள்.
தற்போது மருந்து நன்கொடை வழங்குமாறு பல தரப்பினருக்கும் அவர்கள் கடிதம் எழுதிவருகின்றனர். அத்துடன் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக பல்வேறு தொழிற்சங்கங்கள் மற்றும் ஊடகங்கள் தொடர்ந்து தெரிவித்துவந்த சந்தர்ப்பங்களில், அவ்வாறாதொரு நிலை ஏற்படாது என அரசியல்வாதிகளும் சுகாதார அதிகாரிகளும் தெரிவித்து வந்தனர்.
ஆனால் இன்று சுகாதார பணிப்பாள் நாயகம் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக மருந்து உற்பத்தி, விநியோகத்துக்கு பொறுப்பான இராஜாங்க அமைச்சின் ஊடாக நிவாரண அடிப்படையில் மருந்துபொருட்களை கொண்டுவரும் பொறிமுறை ஒன்றை தயாரிக்குமாறு எழுத்து மூலம் தெரிவித்துள்ளார்.
நாட்டுக்குள் தற்போது ஏற்பட்டிருக்கும் மருந்து தட்டுப்பாடு ஆரம்பகட்டமாகும். இது எதிர்வரும் 6 முதல் 12 வாரங்கள் ஆகும் வரை நீடித்தால் பாரிய நிலைக்கு செல்லும் அபாயம் இருக்கின்றது.
இதன் காரணமாகமக்கள் பாரியளவில் நோய்வாய்ப்படுவதற்கும், அந்த நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது அது மரண நிலைக்கு செல்லும் அபாயம் இருக்கின்றது என இலங்கை மருத்துவ சங்கம் உட்பட வைத்திய நிபுணர்களின் சங்கங்கள் ஆய்வு ரீதியாக அறிவித்திருக்கின்றது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/CeHi0bn https://ift.tt/v7hGuKg
#TELEGRAM_CHANNEL
👇👇👇 https://ift.tt/ytUFNuz
https://ift.tt/CLDKras
https://ift.tt/CLDKras
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.