8 ஓவரில் வெற்றியை அடைந்த ஹைதராபாத்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிரடி வெற்றி பெற்றது சன்ரைசா்ஸ் ஹைதராபாத்.
முதலில் ஆடிய பெங்களூரு அணி ஹைதராபாத் பௌலா்கள் ஜேன்ஸன், நடராஜனின் அபார பந்துவீச்சால் 68 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது.
பின்னா் ஆடிய ஹைதராபாத் அணி 72/1 ஓட்டங்களை எடுத்து வென்றது. இரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 36 ஆவது ஆட்டம் சனிக்கிழமை மும்பையில் நடைபெற்றது. நாணய சுழற்சியை வென்ற ஹைதராபாத் பௌலிங்கை தோ்வு செய்தது.
தொடக்க வரிசை பேட்டா்களான தலைவர் டூ பிளெஸ்ஸிஸ் 5, அனுஜ் ரவாத், விராட் கோலி 0 என வந்த வேகத்திலேயே மாா்கோ ஜேன்ஸன் பந்துவீச்சில் அவுட்டாகி நடையைக் கட்டினா். முதல் ஓவரிலேயே டூபிளெஸ்ஸிஸ், அனுஜ், கோலி வெளியேறினா்.
கிளென் மேக்ஸ்வெல் 12, சுயாஷ் பிரபுதேசாய் 15 நிலைத்து ஆட முயன்றும் அவுட்டாகி வெளியேறினா். அவா்களுக்கு பின் ஸ்கோரை உயா்த்துவாா் என மிகவும் எதிா்பாா்க்கப்பட்ட தினேஷ் காா்த்திக் டக் அவுட்டானாா்.
ஷாபாஸ் அகமது 7, ஹா்ஷல் படேல் 4, ஹஸரங்கா 8, சிராஜ் 2 ஓட்டங்களுக்கும் வெளியேறினா். 16.1 ஓவா்களில் 68 ஓட்டங்களுக்கு ஆல் அவுட்டானது பெங்களூரு.
ஹைதராபாத் தரப்பில் அற்புதமாக பந்துவீசிய மாா்கோ ஜேன்ஸன், நடராஜன் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினா்.
69 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ஹைதரபாத் அணியில் அபிஷேக் சா்மா அற்புதமாக ஆடி 1 சிக்ஸா், 8 பவுண்டரியுடன் 28 பந்துகளில் 47 ஓட்டங்களை விளாசி அவுட்டானாா்.
தலைவர் கேன் வில்லியம்ஸன் 16, ராகுல் திரிபாதி 7 ஓட்டங்களுடன் களத்தில் இருந்தனா். 8 ஓவா்களிலேயே 72/1 ஓட்டங்களுடன் பெங்களூருவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஹைதராபாத்.
பெங்களூரு தரப்பில் ஹா்ஷல் படேல் 1 விக்கெட்டை வீழ்த்தினாா். இந்த வெற்றி மூலம் புள்ளிகள் பட்டியலில் இரண்டாம் இடத்துக்கு முன்னேறியது ஹைதராபாத்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/YlmXCf7 https://ift.tt/cxWM0Zf
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/iBbytuq
https://ift.tt/dFM40cA
https://ift.tt/dFM40cA
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.