முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீதும் காடையர்கள் இன்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

 முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீதும் காடையர்கள் இன்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.


நீர்கொழும்பு பெரியமுல்லை மற்றும் கட்டுவாபிட்டிய பகுதியில் பிரபல ஹோட்டல் ஒன்று தீ வைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அரசியல் வாதிகளின் பின்புலத்துடன் அப்பகுதி முஸ்லிம்களின் கடைகள் மற்றும் வீடுகள் மீதும் காடையர்கள் இன்று மாலை தாக்குதல் நடத்தியுள்ளனர்.


அசம்பாவிதத்தில் இதுவரை 4 பேர் வெட்டு காயங்களுக்கு ஆளாகி மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளனர்.


நிலமைகளை வேண்டுமென்றே பாதகமான நிலைக்கு திசைதிருப்பி அமைதியை கெடுத்து குளிர்காய தீய சக்திகள் மீண்டும் சூழ்ச்சிகள் செய்ய முயற்சிக்கின்றனர்.


 எனவே நாட்டினதும், மக்களினதும் பாதுகாப்பு கருதி 100 வீதம் அமைதியை பேணுங்கள்.


தாகித்திருக்கும் வெறியர்களுக்கு நீங்கள்  இரையாகி விடாதீர்கள்!

#அங்கு அமைதி, பாதுகாப்பு நிலவ பிரார்த்தனை செய்யுங்கள்.


எந்தவொரு பகுதியிலும் தீயவர்களின் செயல்களுக்கு வழிசமைத்து விடாதீர்கள்.

10.05.2022


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.