தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்..

 தொடர் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள தொழிற்சங்கங்கள்..


பல்வேறு தொழிற்சங்கங்கள் தொடர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

வன்முறைகளை ஊக்குவிக்கும் அரசாங்கத்திற்கு அதிருப்தியை வெளிப்படுத்தும் நோக்கில் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இன்று(10) முதல் மறு அறிவித்தல் வரை அனைத்து கடமைகளிலிருந்தும் விலகுவதற்கு தமது உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளதாக இலங்கை பொது நிர்வாக சேவைகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில், அரசியல்வாதிகள் பங்கேற்கும் கூட்டங்களில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, சுகாதார ஊழியர்களும் நேற்று(09) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சுகாதார தொழிற்சங்க சம்மேளனத்தின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அமைதியான போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று(09) ஆரம்பிக்கப்பட்ட அடையாள பணிப்புறக்கணிப்பு இன்று(10) காலை 8 மணி வரை தொடரும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர், வைத்தியர் பிரசாத் ரணவீர குறிப்பிட்டுள்ளார்.

பல ரயில்வே தொழிற்சங்கங்களும் நேற்று(09) நள்ளிரவு முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளன.

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌  ⸙ ━━━━━━━ ◈

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇

https://chat.whatsapp.com/JTJYUyANNtKKF4wgxF9vC7

https://chat.whatsapp.com/Fmlmh691mW06cQBwW4Ompz

#TELEGRAM_CHANNEL

👇👇👇

https://t.me/Internationaltamilmedia

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.