வரலாற்றில் இன்று ஜூன் 13.2022
வரலாற்றில் இன்று ஜூன் 13.2022
சூன் 13 கிரிகோரியன் ஆண்டின் 164 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 165 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 201 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
313 – உரோமைப் பேரரசில் அனைவருக்கும் சமயச் சுதந்திரம் அளிக்கும் கட்டளையை உரோமைப் பேரரசர் முதலாம் கான்ஸ்டன்டைன் பிறப்பித்தார்.
1381 – இலண்டனில் விவசாயிகளின் போராட்டத்தினால் சவோய் அரண்மனை எரியூட்டப்பட்டது.
1514 – 1,000 தொன்னிற்கும் அதிகமான பருமனுள்ள அக்காலத்தில் மிகப் பெரும் போர்க் கப்பல் இங்கிலாந்தில் அமைக்கப்பட்டது.
1525 – கத்தோலிக்க திருச்சபையின் கட்டளையை மீறி மார்ட்டின் லூதர் கத்தரீனா வொன் போரா என்பவரைத் திருமணம் புரிந்தார்.
1625 – இங்கிலாந்தின் முதலாம் சார்லசு மன்னர் கத்தோலிக்க இளவரசி பிரான்சின் என்றியேட்டா மரியாவைத் திருமணம் புரிந்தார்.
1774 – அடிமைகள் இறக்குமதியை றோட் தீவு தடை செய்தது. வட அமெரிக்கக் குடியேற்றங்களில் அடிமை இறக்குமதியைத் தடை செய்த முதல் நாடு இதுவாகும்.
1871 – லாப்ரடோரில் சூறாவளி தாக்கியதில் 300 பேர் உயிரிழந்தனர்.
1881 – ஜெனட் என்ற அமெரிக்கக் கப்பல் ஆர்க்டிக் பெருங்கடலில் பனிக்கட்டியுடன் மோதி மூழ்கியதில் 11 பேர் உயிரிழந்தனர்.
1886 – பிரித்தானியக் கொலம்பியாவின் வான்கூவர் நகரத்தின் பெரும் பகுதி தீயினால் சேதமடைந்தது.
1917 – முதலாம் உலகப் போர்: இலண்டன் நகர் மீது செருமனியப் போர் விமானங்கள் தாக்கியதில் 46 குழந்தைகள் உட்பட 162 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – சார்ல்ஸ் ஜென்கின்ஸ் படங்களையும் ஒலியையும் ஒரே நேரத்தில் அனுப்பும் முறையை முதன்முறையாக வெற்றிகரமாகப் பரிசோதித்தார். 10-நிமிட அசையும் படத்தை 5 மைல்கள் தூரத்திற்கு அனுப்பினார்.
1931 – இலங்கை அரசாங்க சபைக்கான முதலாவது தேர்தல் இடம்பெற்றது.
1934 – இட்லரும் முசோலினியும் வெனிசில் சந்தித்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: வில்லெர்ஸ்-போக்காஜ் சண்டை: செருமானியத் தாங்கிகள் பிரித்தானியப் படைகளைத் தாக்கி 14 பிரித்தானியத் தாங்கிகளை அழித்தனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: செருமனி வி-1 பறக்கும் வெடிகுண்டுகளை இங்கிலாந்து மீது வீசியது. மொத்தம் 11 குண்டுகளில் 4 குண்டுகள் இலக்குகளைத் தாக்கின.
1948 – ஈழத்தின் முதல் எழுத்தாளர் சங்கமான தமிழிலக்கிய மறுமலர்ச்சிச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது.
1948 – மலாயா தொழிற்சங்கங்களின் சம்மேளனம் மலேசியாவில் தடை செய்யப்பட்டது.
1952 – சோவியத்தின் மிக்-15 போர் விமானம் சுவீடனின் டிசி-3 ரக போர் விமானத்தைச் சுட்டு வீழ்த்தியது.
1955 – சோவியத் ஒன்றியத்தில் முதலாவது வைரச் சுரங்கம் கண்டுபிடிக்கப்பட்டது.
1977 – மூன்று நாட்களுக்கு முன்னர் சிறையில் இருந்து தப்பிய மார்ட்டின் லூதர் கிங்கின் கொலையாளி யேம்சு ரே மீண்டும் கைது செய்யப்பட்டான்.
1981 – லண்டனில் இடம்பெற்ற அணிவகுப்பு நிகழ்வு ஒன்றில் சிறுவன் ஒருவன் இரண்டாம் எலிசபெத் மகாராணியை நோக்கி வெற்றுத் துப்பாக்கிக் குண்டுகளை சுட்டுத் தீர்த்தான்.
1982 – சவூதி அரேபியாவின் மன்னராக பாகுத் முடிசூடினார்.
1983 – பயனியர் 10 நெப்டியூனின் சுற்றுவட்டத்தை எட்டி, மத்திய சூரியக் குடும்பத்தைத் தாண்டிய முதலாவது விண்கப்பல் என்ற சாதனையை எட்டியது.
2000 – தென்கொரியாவின் அரசுத்தலைவர் கிம் டாய் ஜுங், வடகொரியத் தலைவர் கிம் ஜொங்-இல்லை வடகொரியத் தலைநகர் பியொங்யாங்கில் சந்தித்தார். இரு நாட்டுத் தலைவர்கள் சந்தித்துக் கொள்வது இதுவே முதல் தடவையாகும்.
2002 – ஏவுகணை எதிர்ப்பு ஒப்பந்தத்தில் இருந்து ஐக்கிய அமெரிக்கா விலகியது.
2006 – நியூ ஹரைசன்ஸ் விண்கலம் தனது பயண வழியில் 101,867 கிமீ தூரத்தில் “132524 ஏபிஎல்” என்ற சிறுகோளை சந்தித்து அதன் படத்தைப் பூமிக்கு அனுப்பியது.
2007 – திருகோணமலையில் “மேர்சி கோப்ஸ்” என்னும் பன்னாட்டுத் தன்னார்வல அமைப்பின் பிலிப்பீன்ஸ் பணியாளர் ஒருவர் இலங்கைக் கடற்படையினரால் சுடப்பட்டார்.
2010 – 25143 இத்தொகாவா என்ற சிறுகோளில் இருந்து மண் மாதிரிகளுடன் அயபூசா என்ற சப்பானிய விண்கலம் பூமி திரும்பியது.
2012 – ஈராக்கின் பல பாகங்களில் இடம்பெற்ற தாக்குதல்களில் 93 பேர் கொல்லப்பட்டனர்.
இன்றைய தின பிறப்புகள்
40 – அக்ரிகோலா, நீயஸ் ஜூலியஸ், உரோமை இராணுவத் தளபதி (இ. 93)
1773 – தாமசு யங், ஆங்கிலேய இயற்பியலாளர், உளவியலாளர் (இ. 1829)
1831 – ஜேம்ஸ் கிளார்க் மக்ஸ்வெல், இசுக்கொட்டிய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1879)
1865 – டபிள்யூ. பி. யீட்சு, நோபல் பரிசு பெற்ற அயர்லாந்து கவிஞர் (இ. 1939)
1870 – ஜூல்ஸ் போர்டெட், நோபல் பரிசு பெற்ற பெல்ஜிய உயிரியலாளர் (இ. 1961)
1903 – சஞ்சயன், மலையால எழுத்தாளர் (இ. 1943)
1905 – ஜேம்ஸ் இரத்தினம், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், நூலாசிரியர் (இ. 1988)
1909 – ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு, கேரளத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1998)
1911 – லூயிஸ் வால்டர் அல்வாரெஸ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1988)
1917 – அகுஸ்டோ ரொவ பாஸ்டோ, பராகுவை புதின எழுத்தாளர் (இ. 2005)
1928 – ஜான் ஃபோர்ப்ஸ் நாஷ், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கக் கணிதவியலாளர் (இ. 2015)
1933 – யாழ்வாணன், ஈழத்து எழுத்தாளர் (இ. 1996)
1935 – சமாக் சுந்தரவேஜ், தாய்லாந்தின் 25வது பிரதமர் (இ. 2009).
1944 – பான் கி மூன், தென்கொரிய அரசியல்வாதி, ஐநாவின் 8வது பொதுச் செயலர்.
1946 – பவுல் மோட்ரிச், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க உயிரிவேதியலாளர்.
1946 – செர் பகதூர் தேவ்பா, நேபாளத்தின் 32-வது பிரதமர்.
1959 – கிளாசு யோகன்னிசு, உருமேனியாவின் 5வது அரசுத்தலைவர்.
1966 – கிரிகோரி பெரல்மான், உருசியக் கணிதவியலாளர்.
1981 – கிறிஸ் எவன்ஸ், அமெரிக்க நடிகர், தயாரிப்பாளர்.
1987 – ஜி. வி. பிரகாஷ் குமார், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர்.
இன்றைய தின இறப்புகள்
1231 – பதுவை நகர அந்தோனியார், போர்த்துக்கீசப் புனிதர் (பி. 1195)
1861 – ஹென்றி கிரே, ஆங்கிலேய உடல்கூறியலாளர், மருத்துவர் (பி. 1827)
1931 – கிடசாடோ சிபாசாபுரோ, சப்பானிய மருத்துவர் (பி. 1851)
1960 – கார்ல் கீனான் சீபெர்ட், அமெரிக்க வானியலாளர் (பி. 1911)
1969 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)
1969 – பிரகலாத் கேசவ் அத்ரே, இந்திய ஊடகவியலாளர், திரைப்பட இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1898)
1973 – ராம்நாத் சோப்ரா, இந்திய மருந்தியலாளர் (பி. 1882)
1987 – வி. கணபதி அய்யர், இந்தியக் கணிதவியலாளர் (பி. 1906)
1988 – க. வெள்ளைவாரணனார், தமிழகத் தமிழறிஞர், தமிழிசை அறிஞர் (பி. 1917)
1998 – லூசியோ கோஸ்தா, பிரேசில் கட்டிடக்கலைஞர் (பி. 1902)
2007 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியலாளர் (பி. 1937)
2012 – மெஹ்தி அசன், பாக்கித்தானிய கசல் பாடகர் (பி. 1927)
இன்றைய தின சிறப்பு நாள்
கண்டுபிடிப்பாளர் நாள் (அங்கேரி)
மாவீரர் நாள் (ஈராக்கிய குர்திஸ்தான்)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.