வரலாற்றில் இன்று ஜூன் 24.2022

 வரலாற்றில் இன்று ஜூன் 24.2022

சூன் 24 கிரிகோரியன் ஆண்டின் 175 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 176 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 190 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

கிமு 217 – திராசிமின் ஏரி போரில் ஹன்னிபால் கையசு பிளாமினியசு தலைமையிலான உரோமைப் படைகலைத் தோற்கடித்தார்.

474 – யூலியசு நெப்போசு தன்னை மேற்கு உரோமைப் பேரரசராக அறிவித்தார்.

1314 – இராபர்ட்டு புரூசு தலைமையிலான இசுக்கொட்லாந்துப் படைகள் இங்கிலாந்துப் படையினரைத் தோற்கடித்தன. இசுக்கொட்லாந்து தனது விடுதலையை மீண்டும் பெற்றது.[1]

1340 – நூறாண்டுப் போர்: இங்கிலாந்தின் மூன்றாம் எட்வர்டு தலைமையின் கீழ் இங்கிலாந்து கடற்படையினர் பிரெஞ்சுக் படைகளை முற்றாகத் தோற்கடித்தனர்.

1374 – செருமனியின் ஆஃகன் நகரில் புனித ஜானின் நடனம் அந்நகர மக்களுக்கு மாயத்தோற்ரங்களைக் கொடுத்து மக்களை பித்துப் பிடித்தவர்கள் போல நடனமாட வைத்தது. மக்கள் மயங்கும் வரை நடனம் ஆடினர். இப்பித்து பின்னர் ஐரோப்பாவெங்கும் பரவியது.

1497 – ஜான் கபோட் வட அமெரிக்காவில் நியூபவுண்லாந்து தீவில் தரையிறங்கி, வைக்கிங்குகளுக்குப் பின்னர் அப்பகுதியை ஆராய்ந்த முதலாவது ஐரோப்பியர் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.

1509 – எட்டாம் என்றி இங்கிலாந்தின் மன்னராக முடி சூடினார்.

1571 – மிகுவெல் உலோபசு டி லெகாசுபி மணிலா நகரை அமைத்தார்.

1597 – கிழக்கிந்தியத் தீவுகளுக்கான முதலாவது இடச்சுப் பயணிகள் கப்பல் சாவகத்தை அடைந்தது.

1622 – மக்காவு நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் டச்சு நாட்டவர் தோல்வி கண்டனர்.

1779 – அமெரிக்கப் புரட்சிப் போர்: ஜிப்ரால்ட்டர் மீதான பெரும் முற்றுகை ஆரம்பமானது.

1812 – நெப்போலியப் போர்கள்: உருசியாவினுள் ஊடுருவும் முயற்சியில் நெப்போலியனின் பெரும் படை நேமன் ஆற்றைக் கடந்தது.

1813 – கனடா, ஒண்டாரியோவில் பீவர் அணை சமரில் பிரித்தானிய, இந்தியக் கூட்டுப் படை அமெரிக்க இராணுவத்தைத் தோற்கடித்தது.

1821 – எசுப்பானியாவிடம் இருந்து வெனிசுவேலாவின் விடுதலைக்கான போர் கரபோபோ என்ற இடத்தில் நடைபெற்றது.

1856 – இலங்கையில் புகைப்படக்கலை பார்ட்டிங் என்பவரால் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது.[2]

1859 – சார்தீனியா, மற்றும் பிரான்சின் மூன்றாம் நெப்போலியனின் படைகள் வடக்கு இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளைத் தோற்கடித்தன.

1880 – கனடாவின் நாட்டுப்பண்ணாகப் பின்னர் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓ கனடா பாடல் முதல் தடவையாக பாடப்பட்டது.

1894 – பிரான்சின் அரசுத் தலைவர் மரீ பிரான்சுவா சாடி கார்னோ படுகொலை செய்யப்பட்டார்.

1902 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் ஏழாம் எட்வர்டு குடல்வாலழற்சியால் பாதிக்கப்பட்டதால், அவரது முடிசூடல் தள்ளிப்போடப்பட்டது.

1913 – கிரேக்கமும் செர்பியாவும் பல்காரியாவுடனான தொடர்பைத் துண்டித்தன.

1932 – சியாமில் (தாய்லாந்து) இடம்பெற்ற இரத்தம் சிந்தா இராணுவப் புரட்சியை அடுத்து, மன்னரின் அதிகாரங்கள் வெகுவாகக் குறைந்தன.

1938 – 450 மெட்ரிக் தொன் எடையுள்ள விண்கல் பென்சில்வேனியாவின் சிக்கோராவில் வீழ்ந்தது.

1939 – சியாம் நாட்டின் பெயர் தாய்லாந்து என மாற்றப்பட்டது.

1948 – பனிப்போர்: சோவியத் ஒன்றியம் தமது கட்டுப்பாட்டிலுள்ள பெர்லினின் மேற்குப் பகுதியுடன் அமெரிக்க, பிரித்தானிய, பிரெஞ்சுக்கள் வசம் இருந்த பகுதிகளுடனான தரைவழித் தொடர்புகளைத் துண்டித்தது.

1950 – தென்னாபிரிக்காவின் இனவொதுக்கல்: தென்னாப்பிரிக்காவில் மக்களை இனவாரியாகப் பிரிக்கும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டது.

1963 – ஐக்கிய இராச்சியம் சான்சிபாருக்கு உள்ளக சுயாட்சியை வழங்கியது.

1973 – அமெரிக்காவின் நியூ ஓர்லென்சில் தன்னினச் சேர்க்கையாளர்கள் கூடிய விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீவைப்பு தாக்குதலில் 32 பேர் உயிரிழந்தனர்.

1989 – தியனன்மென் சதுக்கம் எதிர்ப்புப் போராட்டங்களை அடுத்து யான் சமீன் சீனப் பொதுவுடமைக் கட்சியின் பொதுச் செயலாலராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1997 – ஈழப்போர்: பன்றிகெய்தகுளம், பனிக்கநீராவிப் பகுதியில் ஜெயசிக்குறு படையெடுப்பின்போது இடம்பெற்ற தாக்குதலில் 200 இராணுவத்தினரும் 90 விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டனர்.

2002 – தான்சானியாவில் இடம்பெற்ற பெரும் தொடருந்து விபத்தில் 281 பேர் உயிரிழந்தனர்.

2004 – நியூயோர்க்கில் மரண தண்டனை சட்டவிரோதமானதாக அறிவிக்கப்பட்டது.

2010 – ஆத்திரேலியாவின் முதல் பெண் பிரதமராக ஜூலியா கிலார்ட் பதவியேற்றார்.

2007 – கராச்சியில் இடம்பெற்ற மழை மற்றும் சூறாவளியில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

2013 – இத்தாலியின் முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனி தமது அதிகாரத்தை முறை தவறிப் பயன்படுத்தியதாகவும், குறைவயது விலைமாது ஒருவருடன் உறவைப் பேணியதாகவும் குற்றம் சாட்டப்பட்டு அவருக்கு ஏழாண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இன்றைய தின பிறப்புகள்

1542 – சிலுவையின் புனித யோவான், எசுப்பானியப் புனிதர் (இ. 1591)

1619 – ரைக்லாவ் வொன் கூன்சு, ஒல்லாந்த இலங்கையின் ஆளுநர் (இ. 1682)

1883 – யோன் மெட்சிங்கர், பிரான்சிய ஓவியர் (பி. 1956)

1885 – தாரா சிங், சீக்கிய அரசியல், சமயத் தலைவர் (இ. 1967)

1907 – கா. அப்பாத்துரை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1989)

1915 – பிரெட் ஆயில், ஆங்கிலேய வானியலாளர் (இ. 2001)

1921 – கண்ணதாசன், தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், கவிஞர் (இ. 1981)

1928 – எம். எஸ். விஸ்வநாதன், தென்னிந்தியத் திரைப்பட இசையமைப்பாளர் (இ. 2015)

1929 – கரோலின் சூமேக்கர், அமெரிக்க வானியலாளர்.

1937 – அனிதா தேசாய், இந்திய-அமெரிக்க எழுத்தாளர்.

1938 – நீல. பத்மநாபன், தமிழக எழுத்தாளர்.

1953 – வில்லியம். ஈ. மோர்னர், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க வேதியியலாளர், இயற்பியலாளர்.

1961 – இயன் கிளென், இசுக்கொட்டிய நடிகர்.

1966 – விஜயசாந்தி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை, அரசியல்வாதி

1968 – போரிசு கெல்பண்ட், உருசிய-இசுரேலிய சதுரங்க வீரர்

1974 – மது பாலகிருஷ்ணன், தென்னிந்தியத் திரைப்படப் பாடகர்.

1979 – மிண்டி காலிங், அமெரிக்க நடிகை.

1987 – லியோனல் மெசி, அர்ச்செந்தீனக் காற்பந்தாட்ட வீரர்.

இன்றைய தின இறப்புகள்

1398 – கோங்வு சீனப் பேரரசர் (பி. 1328)

1564 – ராணி துர்காவதி, கோண்டுவானா அரசி (பி. 1524)

1908 – குரோவர் கிளீவ்லாண்ட், அமெரிக்காவின் 22வது, 24வது அரசுத்தலைவர் (பி. 1837)

1947 – தர்மானந்த தாமோதர் கோசாம்பி, இந்தியப் பௌத்தப் பேரறிஞர் (பி. 1876)

1957 – பிரான்டிசேக் குப்கா, செக் நாட்டு ஓவியர் (பி. 1871)

1963 – மரிய குவாதலூபே கார்சிய சவாலா, மெக்சிக்கோ புனிதர் (பி. 1878)

1980 – வி. வி. கிரி, இந்தியாவின் 4-வது குடியரசுத் தலைவர் (பி. 1894)

1992 – மகாராஜபுரம் சந்தானம், தமிழக கருநாடக இசைப் பாடகர் (பி. 1928)

2006 – சிட்டி பெ. கோ. சுந்தரராஜன், தமிழக எழுத்தாளர், திரைப்பட விமர்சகர் (பி. 1910)

2007 – கிறிஸ் பென்வா, கனடிய மற்போர் வீரர் (பி. 1967)

2008 – லியோனிடு ஹுர்விக்ஸ், நோபல் பரிசு பெற்ற உருசிய-அமெரிக்க பொருளியலாளர் (பி. 1917)

2020 – எஸ். நடராஜசிவம், இலங்கை வானொலி அறிவிப்பாளர், நடிகர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.