வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
வெதுப்பக உணவுகளின் விலைகளை அதிகரிக்க நடவடிக்கை.

எதிர்காலத்தில் பனிஸ் உட்பட வெதுப்பக உணவுகளுக்கான விலைகள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். ரொட்டி தவிர்ந்த அனைத்து பேக்கரி பொருட்களுக்கும் வெதுப்பக உரிமையாளர்கள் 12 சதவீத வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. வற் வரியை நீக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால், ஒரு பனிஸின் விலை பத்து ரூபாவினால் அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு பேக்கரி உரிமையாளர்களுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அனைத்து வெதுப்பக உரிமையாளர்களில் 60 சதவீதத்தினர் உரிய வரியை செலுத்த வேண்டும் என்றார். மேலும், வெதுப்பக உரிமையாளர்கள் மீது விதிக்கப்பட்டுள்ள வற் வரியில் இருந்து அவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்றும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு எழுத்து மூலம் அறிவிக்கவுள்ளதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். வெதுப்பக தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, பேக்கரி உரிமையாளர்கள் மாஜரின் மற்றும் பால் பவுடர் போன்ற மூலப்பொருட்களுக்கு 12 சதவீத வற் வரி செலுத்துகின்றனர். எனவே வெதுப்பக பொருட்களுக்கு வற் வரியை நீக்கி நிவாரணம் வழங்க வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றனர். இதேவேளை பொருட்களின் விலை அதிகரிப்பு காரணமாக சுமார் 2000 சிறிய அளவிலான பேக்கரிகள் மூடப்பட்டுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/iF48O7I https://ift.tt/PnNJt75 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/Z4wAeK7
https://ift.tt/aePmQhX

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.