விறகுகளை பயன்படுத்தினால் ஆயுள் கூடும்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 விறகுகளை பயன்படுத்தினால் ஆயுள் கூடும்.
எரிவாயுவிற்கு பதிலாக விறகுகளை பயன்படுத்துவதால் ஆயுட்காலம் அதிகரிக்கும் என சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர் , எரிவாயு போன்ற சுத்தமான ஆற்றலைப் பயன்படுத்தும் நாடுகளில் ஆண்களின் ஆயுட்காலம் சுமார் 80 வருடங்கள் எனவும், இலங்கையில் விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் 80.1 வருடங்கள் எனவும் தெரிவித்தார். சுத்தமான எரிசக்தி எரிபொருளைப் பயன்படுத்தும் செல்வந்த நாடுகளில் உள்ளவர்களின் ஆயுட்காலம் 80 மற்றும் 85 ஆண்டுகள். ஆனால் இலங்கையில் விறகு பயன்படுத்தும் பெண்களின் ஆயுட்காலம் 80.1 வருடங்களாகும். அதாவது இலங்கையில் உள்ள சில குறிகாட்டிகள் தெற்காசியாவில் மிக உயர்ந்த நிலையை எட்டியுள்ளன. விறகுகளை பயன்படுத்துவது நாட்டின் வளர்ச்சிக்காகவே தவிர வீழ்ச்சிக்காக அல்ல என்பதை இது காட்டுகிறது. இன்று விறகின் பயன்பாடு ஒரு பழங்குடி செயல்முறையாக குறைத்து மதிப்பிடப்பட்டாலும், 1800கள் வரை விறகு உலகின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக இருந்துள்ளது. 2020ல், உலகின் மொத்த ஆற்றல் நுகர்வில் 10 வீதம் விறகிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/Q2tZOeJ https://ift.tt/GcbgAtL #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/hrH1s7o
https://ift.tt/p4O5IBh
https://ift.tt/p4O5IBh
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.