கொழும்பில் நாளை முதல் அறிமுகமாகும் புதிய சேவை
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொழும்பில் நாளை முதல் அறிமுகமாகும் புதிய சேவை
கொழும்பில் நாளை முதல் தினமும் Park and ride பேருந்து சேவையை நடத்துவதற்கு போக்குவரத்து சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
அதற்கமைய காலை 6 மணி முதல் மாலை 8 மணி வரை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த ஆகிய இடங்களில் குறித்த பேருந்துகள் பயணிக்கவுள்ளன.
மாலை 4 மணி முதல் 6 மணி வரை கொழும்பில் இருந்து மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த வரை பேருந்து பயணிக்கும் என போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய போக்குவரத்து வசதி கொழும்பில் நாளை முதல் அறிமுகமாகும் புதிய சேவை அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
Park and ride என்பது தங்கள் சொந்த வாகனத்தில் பயணத்தை மேற்கொள்ளும் கொழும்பு வாழ் மக்கள் அதனை மாக்கும்புர, கடவத்தை மற்றும் கட்டுபெத்த பகுதிகளில் பாதுகாப்பாக நிறுத்திவிட்டு, சொகுசு பேருந்துகளில் கொழும்பு நகரத்திற்கு பயணிக்க முடியும்.அதற்காக சொகுசு பேருந்து சேவைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
காலை 6 மணி முதல் 8 மணி வரை 5 நிமிடங்களுக்கு ஒரு முறை குறித்த 3 இடங்களில் இருந்து பேருந்துகள் பயணிக்கின்றது. பின்னர் மாலை 6 மணி முதல் 8 மணி வரையான காலப்பகுதியிலும் இவ்வாறு 5 நிமிடங்களுக்கு ஒரு முறை பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.
இடைப்பட்ட காலப்பகுதியில் மணித்தியாலத்திற்கு ஒரு முறை ஒரு பேருந்து பயணிக்கும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டாபயவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 15ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் முதல் முறையாக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது பயன்பாட்டிற்கு வருகின்றது.
வாகன சாரதி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் கொழும்புக்கு வருவதற்கு வசதியாக மற்றும் பாதுகாப்பான பேருந்து சேவைகளை வழங்குவதன் மூலம் காலை மற்றும் மாலை நேரங்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைப்பது இந்த திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/TLCrDIY https://ift.tt/RqCPJ1Q
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/AZG3zjh
https://ift.tt/NxRCl2i
https://ift.tt/NxRCl2i
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.