கூடுதலான விலைக்கு அரிசி விற்பனை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
கூடுதலான விலைக்கு அரிசி விற்பனை.


அம்பாறை மாவட்டத்திலுள்ள வர்த்தக நிலையங்களில், அரிசிக்கான கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் சுற்றிவளைக்கப்பட்டு வருவதாக, பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் மாவட்ட உயர் அதிகாரி தெரிவித்தார்.

 நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலைலையடுத்து, மக்களுக்கு தட்டுப்பாடு இல்லாத வகையில் அத்தியவசியப் பொருட்களை விநியோகிப்பதற்கு அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டு, கட்டுப்பாட்டு விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

2283/43ஆம் இலக்க 10.06.2022ம் திகதியன்று அதி விசேட வர்த்தமானியில் உள்நாட்டு வௌ்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி ஒரு கிலோ கிராம் 210 ரூபாய் என அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை நிர்ணயித்து வெளியிடப்பட்டுள்ளது.

 அதனைத்தொடர்ந்து, அரிசியினை பதுக்கி வைத்து சந்தையில் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்து சில வர்த்தகர்கள் கூடுதலான விலைக்கு அரிசியினை விற்பனை செய்வதாக பொதுமக்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும், பதுக்கல் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை 1977 அல்லது மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு சபையின் 063 2222355 எனும் தொலைபேசி இலக்கத்திற்கும் அறிவிக்க முடியுமென தெரிவித்தார். 

இவ்வாறான வர்த்தக நிலையங்களில் மேற்கொள்ளப்படும் சுற்றிவளைப்பின் போது கண்டுபிடிக்கப்படும் வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றினூடாக பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் சட்டத்திற்கமைய சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தெரிவித்தார். -அம்பாறை நிருபர் ஷிஹான்- 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/kSBwXCP https://ift.tt/Fo0hJ3r 

#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/nOLlcdz
https://ift.tt/Nbd3TFL

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.