இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து! 


திருகோணமலை ஹபரணை பிரதான வீதியில் வேன் ஒன்றும் லொறியொன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில் பயணித்த நால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

இவ்விபத்துச் சம்பவம் இன்று (18) அதிகாலை 1.20 மணியளவில் இடம்பெற்றுள்ளது. கொழும்பிலிருந்து மட்டகளப்புக்குச் சென்ற வேன் ஒன்றும் திருகோணமலையிலிருந்து குருணாகலைக்குச் சென்ற லொறியொன்றுமே இவ்வாறு மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

 விபத்துக்குள்ளானோர் மட்டக்களப்பை சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கின்றனர். வேனில் பயணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை உட்படநால்வர் படுகாயங்களுக்குள்ளான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹபரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

திருகோணமலை நிருபர் பாருக் 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 
👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/XnRVv02 https://ift.tt/ZfqugBL

 #TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/T4frAna
https://ift.tt/bGIl62V

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.