பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாடசாலைகளை மீள ஆரம்பிப்பது தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு
பாடசாலை கல்வி நடவடிக்கைகளை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் மீள ஆரம்பிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். பாடசாலைகள் நடத்தப்படும் முறை இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், பாடசாலைகள் நடத்தப்படும் முறை தொடர்பில் இன்று மாகாண மட்டத்தில் கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.
இந்த பேச்சுவார்த்தையின் பின்னர் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் வழமை போன்று பாடசாலை கல்வி நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து பரிசீலிக்கப்படும்.
அத்துடன் பல பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் நேற்றைய வருகை 65 சதவீதமாக பதிவாகியுள்ளது என சுட்டிக்காட்டியுளளார்.
எரிபொருள் நெருக்கடி நிலவும் எரிபொருள் நெருக்கடியைக் கருத்திற்கொண்டு நாட்டிலுள்ள பல அரச மற்றும் அரச அனுமதிபெற்ற தனியார் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அத்துடன், இணைய வழியில் கற்பித்தல் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/E8lirdZ https://ift.tt/sEaoGf8l
#TELEGRAM_CHANNEL 👇👇👇 https://ift.tt/d7wp8MI
https://ift.tt/NhtVzsc
https://ift.tt/NhtVzsc
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.