பொலிசார் பொதுமக்களிடம் விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பொலிசார் பொதுமக்களிடம் விடுத்துள்ள மிக முக்கிய கோரிக்கை! 


வீடுகள் மற்றும் தனிப்பட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதை தவிர்க்குமாறு காவல்துறை மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளது. 

காவல்துறை ஊடக பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்துள்ளார்.

 எரிபொருளுடன் தொடர்புடைய தீப்பரவல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், மக்கள் தங்களது பாதுகாப்பிற்காக இவ்வாறு வீடுகள் உள்ளிட்ட இடங்களில் எரிபொருளை சேமித்து வைப்பதனை தவிர்க்குமாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை, எரிபொருள் நிலையங்களில் வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கான துண்டு சீட்டை இன்று முதல் விநியோகிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

இராணுவத்தினர் மற்றும் காவல்துறை இணைந்து இந்த பணியினை முன்னெடுக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அத்துடன், எரிபொருளை விநியோகிக்கும் புதிய முறைமையின் அடிப்படையில், வாகன உரிமையாளர்களின் விபரங்களை பதிவு செய்யும் நடைமுறை இன்று முதல் ஆரம்பமாகவுள்ளது.

 கிராம அலுவலர்கள், விவசாயம் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஊடாக இவ்வாறு பதிவு செய்யப்படவுள்ளது. அதேநேரம், எரிபொருள் கொள்வனவு தொடர்பில் கலந்துரையாடுவதற்காக 2 அமைச்சர்கள் இன்றைய தினம் ரஷ்யாவுக்கு பயணமாகவுள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

தற்போது 9,000 மெட்ரிக் டன் டீசலும், 6,000 மெட்ரிக் டன் பெற்றோலும் மாத்திரமே கையிருப்பில் உள்ளது. 

இந்தநிலையில், இன்றைய தினம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடம் இருந்து 10,000 மெட்ரிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். 

அதேநேரம், கடன் திட்டத்தின் அடிப்படையின் கீழ், எரிபொருள் இறக்குமதி செய்யும் நாடுகளின் நிறுவனங்களிடம் இருந்து இணக்கப்பாட்டின் அடிப்படையில் எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பான யோசனை ஒன்றை இன்று அமைச்சரவையில் முன்வைக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/tznx9br https://ift.tt/NyYXPg4 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/0N9LUgq 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/YAMt1KQ 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/x48cONU
https://ift.tt/3SiDQhd

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.