6 மாதங்களுக்குள் முடியாவிட்டால் பதவி விலகுவேன் – தம்மிக்க சூளுரை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
6 மாதங்களுக்குள் முடியாவிட்டால் பதவி விலகுவேன் – தம்மிக்க சூளுரை 

”960 மணிநேரமே என் இலக்கு, அந்தகாலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்ய முடியாவிட்டால் பதவி துறந்து வீடு செல்வேன்.” இவ்வாறு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் தம்மிக்க பெரேரா தெரிவித்தார்.

 தெரண தொலைக்காட்சியில் நேற்றிரவு ஒளிபரப்பான ‘360’ அரசியல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, ” மக்கள் பட்டினியால் வாடினால், நாம் மட்டும் உண்பதில் அர்த்தம் இல்லை. 

ஆக, சென்று எதையாவது செய் எனக்கூறியே – அம்மா என்னை நாடாளுமன்றம் அனுப்பி வைத்தார். 6 மாதங்களுக்குள் உங்களாலும் முடியாவிட்டால் – பதவி துறந்து வாருங்கள் என மனைவியும் அறிவுரை வழங்கியுள்ளார். 

அதேபோல ‘தாத்தா கம் ஹோம்’ (அப்பா வீட்டுக்கு வாங்க) – என பதாகை ஏந்தப்படும் என பிள்ளைகளும் அறிவித்துவிட்டனர். அந்தவகையில் எனக்கான காலம் 6 மாதங்கள். அதாவது 960 மணித்தியாலங்களே எனக்கு வேலை செய்வதற்கான நேரம். 

அந்த காலப்பகுதிக்குள் முன்னேற்றகரமாக எதையாவது செய்யாவிட்டால், ‘தாத்தா கம் ஹோம்’ எனக்கூறி பிள்ளைகள் வந்துவிடுவார்கள். அப்போது எனக்கு வீடு செல்ல வேண்டிவரும். என்னைபோல் ஒருவருக்கு 6 மாதங்களுக்குள் மக்களுக்கு முன்னேற்றகரமான (பொசிடிவாக) – எதையாவது செய்ய முடியாவிட்டால், பதவி வகித்து என்ன பயன்? ” – என்றார். அத்துடன், தனது பணி இலக்குகளையும் தம்மிக்க பெரேரா பட்டியலிட்டு ஆவணமொன்றை வெளியிட்டுள்ளார்.

 டொலர்களை உள்ளீர்ப்பதற்கான வழிமுறைகளையும் பட்டியலிட்டுள்ளார். வங்குரோத்தடைந்த கம்பனிகளை பொறுப்பேற்று, அதனை கட்டியெழுப்பும் நிர்வாக திறன் உள்ள தனக்கு, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி சவாலையும் வெற்றிகொள்ள முடியும் எனவும் நம்பிக்கை வெளியிட்டார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/riye1cH https://ift.tt/fpUOGyq 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/XONlEd7 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/K1fNTJB

 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/DopaNFe
https://ift.tt/ghE21kz

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.