வரலாற்றில் இன்று ஜூலை 25.2021
வரலாற்றில் இன்று ஜூலை 25.2021
சூலை 25 கிரிகோரியன் ஆண்டின் 206 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 207 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 159 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
306 – முதலாம் கான்ஸ்டன்டைன் உரோமைப் பேரரசராக அவரது இராணுவத்தினரால் அறிவிக்கப்பட்டார்.
1261 – கான்ஸ்டண்டினோபில் நகரை நிக்காயப் படையினர் கைப்பற்றி பைசாந்தியப் பேரரசை அங்கு மீண்டும் அமைத்தனர்.
1467 – மொலினெல்லா என்ற இடத்தில் நடந்த சமரில் முதல் தடவையாக சுடுகலன்கள் இத்தாலியில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டன.
1547 – இரண்டாம் என்றி பிரான்சின் மன்னராக முடிசூடினார்.
1554 – முதலாம் மேரி, எசுப்பானியாவின் இரண்டாம் பிலிப்பு மன்னரைத் திருமணம் புரிந்தார்.
1583 – குங்கோலிம் கிளர்ச்சி: கோவாவில் போர்த்துக்கீச ஆட்சிக்கு எதிரான இந்துக்களின் கிளர்ச்சி இடம்பெற்றது. 5 இயேசு சபை மதகுருமார், ஒரு ஐரோப்பியர், 14 இந்தியக் கிறித்தவர்கள் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்கள் பலர் பின்னர் அரசினால் கொல்லப்பட்டனர்.
1593 – பிரான்சின் நான்காம் என்றி மன்னர் புரட்டத்தாந்து மதத்தில் இருந்து ரோமன் கத்தோலிக்கத்துக்கு பகிரங்கமாக மதம் மாறினார்.
1603 – இசுக்கொட்லாந்தின் ஆறாம் யேம்சு இங்கிலாந்தின் மன்னராக (முதலாம் யேம்சு) முடிசூடினார். இதன் மூலம் இங்கிலாந்தும் இசுக்காட்லாந்தும் ஒன்றிணைந்தன. அரசியல் ரீதியான இணைப்பு 1707 இல் நிகழ்ந்தது.
1609 – ஆங்கிலேயக் கப்பல் சீ வென்ச்சர் வர்ஜீனியா செல்லும் வழியில் புயலில் சிக்கி பெர்முடாவில் தரை தட்டியது. உயிர்தப்பியவர்கள் அங்கு புதிய குடியேற்றத்தை ஆரம்பித்தனர்.
1783 – அமெரிக்கப் புரட்சிப் போர்: போரின் கடிசைச் சமர் கடலூர் முற்றுகை அமைதி உடன்பாட்டுடன் முடிவடைந்தது.1797 – எசுப்பானியாவின் ரெனெரைஃப் நகரைக் கைப்பற்றும் முயற்சியில் ஒராசியோ நெல்சன் தனது 300 படையினரையும், தனது ஒரு கையையும் இழந்தார்.
1799 – எகிப்தில் அபூ கிர் சமரில் பிரான்சின் முதலாம் நெப்போலியன் 10,000 உதுமானியர்களை வென்றான்.
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: கனடா மீதான அமெரிக்காவின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது.
1837 – மின்சாரத் தந்தியின் முதலாவது வணிகரீதியான பயன்பாடு இலண்டனில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க ஒன்றியத்தைக் கட்டிக்காக்கவே போரிடுவதாகவும், அடிமைமுறையை ஒழிக்கவல்ல என ஐக்கிய அமெரிக்க சட்டமன்றம் தீர்மானம் நிறைவேற்றியது.
1869 – யப்பானில் மெய்சி மீள்விப்பு சீரமைப்பின் ஒரு பகுதியாக யப்பானிய நிலக்கிழார்கள் தமது நிலங்களை பேரரசருக்குக் கொடுத்தனர்.
1894 – முதலாம் சீன சப்பானியப் போர் (1894-1895) ஆரம்பமானது.
1898 – புவேர்ட்டோ ரிக்கோவை ஐக்கிய அமெரிக்கா எசுப்பானியாவிடம் இருந்து கைப்பற்றியது.
1908 – அஜினோமோத்தோ டோக்கியோ பல்கலைக்கழகத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
1917 – கனடாவில் முதல் தடவையாக வருமான வரி அறிமுகப்படுத்தப்பட்டது.
1925 – சோவியத் செய்தி நிறுவனம் “டாஸ்” நிறுவப்பட்டது.
1939 – இலங்கையில் இலங்கை இந்திய காங்கிரஸ் கட்சி அமைக்கப்பட்டது.
1934 – ஆத்திரியாவின் அரசுத்தலைவர் எங்கல்பேர்ட் டோல்ஃபுசு நாட்சிகளால் படுகொலை செய்யப்பட்டார்.
1943 – இரண்டாம் உலகப் போர்: இத்தாலிய சர்வாதிகாரி பெனிட்டோ முசோலினி பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் கனடிய இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுபிரிங் நடவடிக்கை பெரும் இழப்புகளைச் சந்தித்தது.
1946 – அணுகுண்டு சோதனை: மார்சல் தீவுகளில் பிக்கினி திட்டில் அணுவாயுதங்கள் நீருக்கடியில் வெடிக்கவைக்கப்பட்டன.
1956 – அமெரிக்காவில் நான்டக்கெட் தீவுக்கருகில் இத்தாலியப் பயணிகள் கப்பல் அண்ட்றியா டோரியா ஸ்டாக்கோம் கப்பலுடன் மோதி அடுத்தநாள் மூழ்கியது. 51 பேர் உயிரிழந்தனர்.
1957 – தூனிசியா குடியரசு நிறுவப்பட்டது.
1961 – பனிப்போர்: பெர்லின் மீதான எந்தவிதமான தாக்குதலும் நேட்டோ மீதான தாக்குதலாகக் கருதப்படும் என அமெரிக்க அரசுத்தலைவர் ஜான் எஃப். கென்னடி அறிவித்தார்.
1973 – சோவியத்தின் மார்ஸ் 5 விண்கலம் ஏவப்பட்டது.
1976 – வைக்கிங் திட்டம்: வைக்கிங் 1 செவ்வாய்க் கோளின் சைடோனியா என்ற பகுதியைப் படம் பிடித்தது.
1978 – வெளிச் சோதனை முறை கருக்கட்டல் மூலம் முதலாவது மாந்தர் (லூயிசு பிரவுன்) இங்கிலாந்தில் பிறந்தார்.
1979 – சினாய் தீபகற்பத்தின் இன்னும் ஒரு பகுதியை இசுரேல் எகிப்திடம் திருப்பிக் கொடுத்தது.
1983 – கறுப்பு யூலை: கொழும்பு வெலிக்கடைச் சிறையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 37 தமிழ் அரசியல் கைதிகள் சிங்களக் கைதிகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
1984 – சல்யூட் 7 விண்கலத்தில் சென்ற உருசியாவின் சிவெத்லானா சவீத்சுக்கயா விண்ணில் நடந்த முதலாவது பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
1993 – தென்னாப்பிரிக்காவின் கேப் டவுன் நகரில் புனித யேம்சு தேவாலயத்தில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 11 மதகுருக்கள் உயிரிழந்தனர், 58 பேர் காயமடைந்தனர்.
1993 – இசுரேல் லெபனான் மீது பெரும் தாக்குதலை ஆரம்பித்தது. ஏழு நாட்கள் இப்போர் நீடித்தது.
1993 – மண்கிண்டிமலை இராணுவ முகாம் விடுதலைப் புலிகளினால் தாக்கியழிக்கப்பட்டது.
1994 – இசுரேலுக்கும் யோர்தானுக்கும் இடையில் வாசிங்டனில் அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டு 1948 முதல் இருந்து வந்த முறுகல் நிலை முடிவுக்கு வந்தது.
1995 – பாரிசு நகரில் தொடருந்து நிலையம் ஒன்றில் இடம்பெற்ற வெடிப்பில் எட்டுப் பேர் உயிரிழந்தனர், 80 பேர் காயமடைந்தனர்.
1996 – புருண்டியில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசுத்தலைவர் சில்வெசுட்டர் இந்திபந்துங்கான்யா பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1998 – யாழ்ப்பாணத்தில் இருந்து 52 தமிழ் அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று தனுஷ்கோடி அருகே கவிழ்ந்ததில் 15 பெண்கள், 5 சிறுவர்கள் உட்பட 45 பேர் கடலில் மூழ்கி உயிரிழந்தனர்.[1]
2000 – கான்கோர்டு ஏர் பிரான்சு வானூர்தி 4590 பாரிசு பாரிசு சார்லசு டிகால் வானூர்தி நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 109 பேரும் தரையில் 4 பேரும் உயிரிழந்தனர்.
2007 – பிரதிபா பாட்டீல் இந்தியாவின் முதலாவது பெண் குடியரசுத் தலைவரானார்.
2010 – ஆப்கானித்தான் போர் தொடர்பான முக்கிய ஆவணங்களை விக்கிலீக்ஸ் வெளியிட்டது.
இன்றைய தின பிறப்புகள்
1165 – இப்னு அரபி, சூபி அறிஞர் (இ. 1240)
1854 – ஆல்பிரட் பாசெட், பிரித்தானியக் கணிதவியலாளர் (இ. 1930)
1875 – ஜிம் கார்பெட், இந்திய சூழலியலாளர், எழுத்தாளர் (இ. 1955)
1880 – ஜோசேபே முஸ்காதி, இத்தாலிய மருத்துவர் (இ. 1927)
1887 – குமாரதுங்க முனிதாச, சிங்கள எழுத்தாளர், கவிஞர் (இ. 1944)
1894 – காவ்ரீலோ பிரின்சிப், பொசுனிய-செர்பிய புரட்சியாளர் (இ. 1918)
1908 – செம்மங்குடி சீனிவாச ஐயர், தமிழக கருநாடக இசைப் பாடகர் (இ. 2003)
1915 – சோ. உ. எதிர்மன்னசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1920 – சு. ஜெயலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை (இ. 2007)
1920 – உரோசலிண்டு பிராங்குளின், ஆங்கிலேய உயிரியலாளர், வேதியியலாளர் (இ. 1958)
1920 – சுசிரோ அயாசி, சப்பானிய வானியற்பியலாளர் (இ. 2010)
1929 – சோம்நாத் சட்டர்ஜி, இந்தியாவின் 14வது மக்களவைத் தலைவர்.
1931 – பீட்டர் அம்புருசிடர், செருமானிய இயற்பியலாளர்.
1938 – சுதிர் காகர், இந்திய உளவியல் பகுப்பாய்வாளர், எழுத்தாளர்.
1939 – ச. இராமதாசு, தமிழக அரசியல்வாதி.
1939 – மகேந்திரன், தமிழகத் திரைப்பட இயக்குநர்.
1946 – பொன். செல்வராசா, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி.
1956 – பிரான்செசு ஆர்னோல்டு, அமெரிக்க அறிவியலாளர், பொறியியலாளர்.
1964 – ஆனே ஆப்பில்பாம், அமெரிக்க ஊடகவியலாளர்.
1973 – கூ யா, சீன செயற்பாட்டாளர்.
இன்றைய தின இறப்புகள்
1834 – சாமுவேல் டெய்லர் கோல்ரிட்ஜ், ஆங்கிலேய மெய்யியலாளர், கவிஞர் (பி. 1772)
1843 – சார்லசு மேகிண்டோச், இசுக்கொட்டிய வேதியியலாளர், பொறியியலாளர் (பி. 1766)
1980 – விளாடிமிர் விசொட்சுக்கி, உருசியப் பாடகர், கித்தார் கலைஞர், நடிகர் (பி. 1938)
1983 – குட்டிமணி, தமிழீழப் போராட்டத் தலைவர்.
1996 – எம். ஏ. மாணிக்கவேலு நாயக்கர், தமிழக அரசியல்வாதி (பி. 1896)
2001 – பூலான் தேவி, இந்திய கொள்ளைக்காரி, அரசியல்வாதி (பி. 1963)
2008 – ராண்டி பௌஷ், அமெரிக்க கணினி அறிவியலாளர் (பி. 1960)
2011 – ரவிச்சந்திரன், தமிழ்த் திரைப்பட நடிகர்.
2013 – அருண் நேரு, இந்திய அரசியல்வாதி (பி. 1944)
2015 – சீலன் கதிர்காமர், இலங்கைத் தமிழ் வரலாற்றாளர், எழுத்தாளர், இடதுசாரி அரசியல்வாதி (பி. 1934)
2021 – இரா. இளங்குமரனார், தமிழகத் தமிழறிஞர் (பி. 1930)
இன்றைய தின சிறப்பு நாள்
குடியரசு நாள் (துனீசியா)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.