பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக்கை

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பாதுகாப்பு செயலாளர் கடும் எச்சரிக்கை 

நாட்டின் அடிப்படைச் சட்டத்தின் கீழ் போராட்டங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் போராட்டங்கள் என்ற போர்வையில் சட்டவிரோத நடவடிக்கைகள் ஈடுபடுவோருக்கு எதிராக அதிகபட்ச அதிகாரம் பயன்படுத்தப்படும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

 அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டம் தொடர்பில் விளக்கமளிக்க அரசாங்கத்தின் நாடாளுமன்றக் குழுவை அழைத்திருந்தார். 

அங்கு விசேட உரையாற்றிய கமால் குணரத்ன, தற்போதைய நிலைமையை தானும் பாதுகாப்பு தரப்பினரும் மூன்று மாதங்களாக பொறுத்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். 

இராணுவம் பொறுமை காத்திருப்பது கோழைத்தனம் என சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக அவர் கூறியுள்ளார். 

எதிர்காலத்தில் எவரேனும் அரச சொத்துக்களுக்கு அல்லது அரசாங்க அலுவலகங்களுக்கு சேதம் விளைவிக்க முற்பட்டால், அவசரகால சட்ட விதிமுறைகளின் அதிகபட்ச பலம் பயன்படுத்தப்படும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/eto9yuQ https://ift.tt/pOFDjs1 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/InN1UsV

 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/QXk8UDC

 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/fsPnapK
https://ift.tt/aErBpkP

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.