இலங்கை நாணயம் தொடர்பில் பொருளாதார ஆய்வாளர் கடும் எச்சரிக்கை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இலங்கை நாணயம் தொடர்பில் பொருளாதார ஆய்வாளர் கடும் எச்சரிக்கை. 


இலங்கையில் பணவீக்கம் 60 வீதம் முதல் 70 வீதம் வரை அதிகரித்தால் நாட்டின் நாணயத்தின் பெறுமதி கடுமையாகப் பாதிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் அதே வேளையில் நிதிச் சிக்கல்கள் உள்ளவர்களின் கைகளுக்குப் பணத்தைச் சேர்ப்பதற்கான முறைமை உருவாக்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

இது குறித்து தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், இலங்கையின் பணவீக்கம் 54 சதவிகிதம் என்பது முற்றிலும் உலகளாவிய காரணிகளால் ஏற்பட்டதல்ல, உள்ளூர் காரணிகளும் இதில் பாரிய தாக்கம் செலுத்தியுள்ளன.

 ஏழை மக்களை சங்கடப்படுத்த கூடும் அமைப்பில் தேவையில்லாமல் பணம் சேர்த்ததே இதற்குக் காரணமாகும். மத்திய வங்கி ஆளுநரின் நியமனத்திற்குப் பிறகு, வட்டி விகிதங்கள் உயர்த்தப்பட்டன. சந்தையில் இருந்து பணத்தைப் பெறுவதற்கு அவர் அதிக நாட்டம் காட்டினார்.

 அதுவும் ஒரு நல்ல போக்கு." ஆனால், அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க சுமார் 1.2 டிரில்லியன் ரூபாய் தேவை என பிரதமர் அறிவித்துள்ளார். அப்படியே பணத்தை அச்சடித்துக்கொண்டே இருந்தால், இந்தப் பணவீக்கத்தைக் குறைக்கவே முடியாது. 

இது ஏழை மக்களை மேலும் சங்கடப்படுத்தும். ஆகையினால் நாம் செய்ய வேண்டிய மற்ற விடயம் என்னவென்றால், ஏழை மக்களைப் பாதுகாக்க பணம் அவர்களின் கைகளுக்குச் செல்லும் ஒரு அமைப்பைத் தயாரிப்பதாகும். 

பணவீக்கம் 60 வீதம் முதல் 70 வீதம் வரை இருந்தால், எமது நாணயம் அதன் மதிப்பை இழக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார். 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/PGwMR9h https://ift.tt/7IPofy8 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/9OgQ8r3 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/HPRnW12

 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/AU5Lm9H
https://ift.tt/VCNW6hp

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.