தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தினை பயன்படுத்துவது எப்படி?
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
புதிய நடைமுறையின் கீழ் ,தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.
இதற்கான இணையதளம் http://fuelpass.gov.lk என்பதாகும்.
இந்த நடைமுறையின் கீழ் பதிவை மேற்கொண்ட பின்னர் ,சிபேட்கோ அல்லது லங்கா IOC எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூலம் வாராந்தம் தேவையான எரிபொருள் கோட்டாவை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கங்சன விஜேசேகர தெரிவித்தார்.
தேசிய அடையாள அட்டை இலக்கம், வாகன Chassis இலக்கம் உள்ளிட்ட விடயங்கள் அடங்கிய QR CODE புதிய அனுமதிப்பத்திரத்தில் காணப்படும் என எரிசக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசாங்த தகவல் தணைக்களத்தில் நேற்று (16) நடைபெற்று ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இந்த பதிவை மேற்கொள்ளும் போது இரண்டு வாகனங்களை வைத்திருப்பவர்கள் தமது வீட்டில் இருக்கும் மற்றுமொரு நபரின் தேசிய அடையாள அட்டைக்கு கடவுச்சிட்டுக்கு அல்லது வாகன பதிவு சான்றிதழின் கீழ் இணைந்துகொள்ள முடியும்.
ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்ளும் வகையில் குறித்த அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
ஒரு தேசிய அடையாள அட்டைக்கு, ஒரு வாகனத்திற்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கும் வகையில் தேசிய அனுமதிப்பத்திரம் விநியோகிக்கப்படும். நாட்டுக்குத் தேவையான எரிபொருளை இறக்குமதி செய்வதில் எமக்கு நிதி ரீதியில் சவால்களை எதிர்நோக்க வேண்டிய நிலை காணப்பட்டது. 43,000 மெட்ரிக் தொன் டீசலுடனான கப்பல் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது.
மூன்று வாரங்களுக்கு முன்னர் கொள்வனவு செய்யப்பட்ட முதலாவது டீசல் கப்பலே இவ்வாறு இலங்கையை வந்தடைந்தது. இதன் தரம் தொடர்பிலான நிருவாக நடவடிக்கைகள் தற்போது இடம்பெறுகின்றன.
இதேவேளை மற்றுமொரு டீசல் கப்பல் இன்று இரவு நாட்டை வந்தடையும் என்று எதிர்பார்க்கின்றோம். இதேபோன்று மற்றுமொரு பெற்றோலுடனான கப்பல் இம்மாதம் 18 ஆம் திகதி அல்லது 19 ஆம் திகதி நாட்டை வந்தடையும் என எதிர்பார்க்கின்றோம்.
மற்றுமொரு பெற்றோலுடனான கப்பல் இம்மாதம் 22.அல்லது 23 ஆம் திகதி இலங்கையை வந்தடையும். இவற்றுக்கான கொடுப்பனவு திறைசேரி மற்றும் இலங்கை மத்திய வங்கி ஆகியவற்றுடன் அமைச்சின் ஊடாக செலுத்தப்பட்டுள்ளது.
என்றும் அமைச்சர் கூறினார். இவை இறக்குமதி செய்யப்பட்ட பின்னர் மீண்டும் பெற்றோலிய கூட்டுத்தாபனம் அதாவது CEYPETCO மூலம் விநியோக நடவடிக்கை மேற்கொள்ள்ப்படும் என்றும் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/FHXfLZP https://ift.tt/AasFG3Q
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/nt0hefi
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/5HAJRZm
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/7GPpTm2
https://ift.tt/52n3UBu
https://ift.tt/52n3UBu
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.