இன்னும் சில மணித்தியாலங்களில், புதிய ஜனாதிபதி தெரிவு!

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இன்னும் சில மணித்தியாலங்களில், புதிய ஜனாதிபதி தெரிவு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக நாடாளுமன்றில் ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான, வாக்கெடுப்பு இன்னும் சில மணித்தியாலங்களில் நடைபெறவுள்ளது. இதற்காக, நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10 மணிக்கு கூடவுள்ளது. பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும மற்றும் அநுரகுமார திஸாநாயக்க ஆகிய மூவருக்கு இடையே ஜனாதிபதி பதவிக்கான போட்டி நிலவுகிறது. ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது. இதனிடையே, ஜனாதிபதி பதவிக்காக வேட்பாளராக முன்னிலையாகியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவும், அவருக்கு ஆதரவளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா உள்ளிட்டோரும் கூட்டமைப்பின் கூட்டத்தில் நேற்றிரவு பங்கேற்று, முக்கிய கலந்துரையாடலை நடத்தியுள்ளனர். இதன்போது, சில வாக்குறுதிகளை வழங்கிய ஆவணத்தில் கையொப்பமிட்டு, டலஸ் அழகப்பெரும, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கியுள்ளதாக கூட்டமைப்பின் உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில் பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவாக வாக்களிக்க இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது. கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தமது ட்விட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி பதவிக்கான வாக்கெடுப்பில், வேட்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க, தமிழ் முற்போக்கு கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தீர்மானித்துள்ளன. அதேநேரம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளதாக கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ மற்றும் உதய கம்மன்பில உள்ளிட்ட ஆளுந்தரப்பு சுயாதீன உறுப்பினர்கள் குழவினரும், நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெருமவுக்கு ஆதரவாக வாக்களிக்க தீர்மானித்துள்ளனர். இதேவேளை, சி.வி.விக்னேஸ்வரன் தலைமையிலான தமிழ் மக்கள் தேசிய கூட்டணி வாக்கெடுப்பின்போது நடுநிலை வகிக்கவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் வாக்கெடுப்பை புறக்கணிக்கவும் தீர்மானித்துள்ளதாக ஏற்கனவே அறிவித்துள்ளன. இதற்கிடையில் ஐக்கிய மக்கள் முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் அருணாசலம் அரவிந்தகுமார், பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிப்பதாக தெரிவித்துள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/XHqr5td https://ift.tt/4FGZtAh 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/NfJ6o75 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/vNKA3Bx 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/KRYEZBa
https://ift.tt/mouPO9v

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.