வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால் பறிபோன உயிர்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால் பறிபோன உயிர்!
நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நயினாதீவில் நிலைதவறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்த குடும்பத்தலைவருக்கு உரிய சிகிச்சையளிக்க நயினாதீவு பிரதேச வைத்தியசாலை பணியாளர்களின் அசமந்தத்தால், அவர் உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் நயினாதீவு முதலாம் வட்டாரத்தைச் சேர்ந்த சிற்றம்பலம் செல்வக்குமார் (வயது-42) என்ற 2 பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
நயினாதீவு இறங்குதுறையில் இன்று மாலை 6.30 மணிக்கு வந்தடைந்த பயணிகள் படகில் வந்திறங்கிய குடும்பத்தலைவர், அங்கிருந்து லாண்ட்மாஸ்டரில் வீடு செல்லும் போது, ஆலயத்திற்கு முன்பாக உள்ள வீதி வளைவில் வாகனம் திரும்பியபோது நிலைதடுமாறி வீழ்ந்து தலையில் படுகாயமடைந்துள்ளார்.
அதனை அடுத்து அவரை உடனடியாக நயினாதீவு பிரதேச மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற போது, அங்கிருந்த பணியாளர்கள் அனுமதிக்க மறுத்தனர், அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்று சுத்தம் செய்துவிட்டு அழைத்து வருமாறு குறிப்பிட்டனர் அதனால், காலதாமதம் ஏற்பட்டு குடும்பத்தலைவர் உயிரிழந்தார் என உறவினர்கள் தெரிவித்தனர்.
அதேவேளை குறித்த நபர் மதுபோதையில் இருந்தமையால், அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க முடியாமல் போனதாக வைத்தியசாலை தரப்புக்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன் சம்பவம் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் உத்தரவில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். யாழ். நிருபர் பிரதீபன்
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/t6X5bFq https://ift.tt/tpULobq
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/6ZVcLpN
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/btn0v8l
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/Z1M7Fxy
https://ift.tt/UKOEtzA
https://ift.tt/UKOEtzA
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.