26 முதல் QR Code முறை அமுல்.
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
26 முதல் QR Code முறை அமுல்.
வாகன இலக்க தகடு முறை ரத்து - காஞ்சன விஜேசேகர தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை, (26) செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமை இரத்து செய்யப்படும் என்று, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
வாகன இலக்க தகடு முறை ரத்து - காஞ்சன விஜேசேகர தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை, (26) செவ்வாய்க்கிழமை முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும். ஆகஸ்ட் முதலாம் திகதி முதல் வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமை இரத்து செய்யப்படும் என்று, வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் பதிவிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமை (26) செவ்வாய்க்கிழமை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும்.
இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் கீழ் இயங்கும் சிபெட்கோ எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும், ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இந்த முறைமை பின்பற்றப்படும்.
அத்துடன், ஆகஸ்ட் முதலாம் திகதி வரை, வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கும் முறைமையும் நடைமுறையிலிருக்கும்.
தொழிநுட்ப சிக்கல்கள் காணப்படும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களில், அவை சரி செய்யப்படும் வரை வாகன இலக்க தகட்டின் இறுதி எண் அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படும்.
60 சத வீதமான இடங்களில் ஏற்கனவே இந்த முறைமை பரிசீலிக்கப்பட்டுள்ளது. அவற்றில் தேசிய எரிபொருள் அனுமதி அட்டை முறைமையில் எரிபொருள் விநியோகத்துக்கு முன்னுரிமையளிக்கப்படும்.
சகல சிபெட்கோ மற்றும் ஐ.ஓ.சி. எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்களிடமும், இந்த முறைமையை நடைமுறைப்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம். ஆகஸ்ட் முதலாம் திகதிக்குள், சகல எரிபொருள் நிரப்பும் நிலையங்களிலும் இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படும்.
தேசிய எரிபொருள் அனுமதி அட்டையைப் பெற்றுக் கொள்வதற்காக பதிவு செய்து, இந்த முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு ஒத்துழைக்குமாறு பொது மக்களிடம் கேட்டுக் கொள்கிறோம்.
தொழில் நிமித்தம் ஒன்றுக்கு மேற்பட்ட வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு இவ்வார இறுதிக்குள், அது குறித்த தகவல்கள் வழங்கப்படும். அத்துடன், அவை அரச நிறுவனங்களில் பதிவு செய்யப்படும்.
மின் பிறப்பாக்கிகள் மற்றும் வீட்டுத்தோட்ட இயந்திரங்கள் உள்ளிட்டவற்றுக்கு எரிபொருளைப் பெற்றுக் கொள்வதற்கான பதிவுகள், பிரதேச செயலகங்கள் ஊடாக முன்னெடுக்க்பபடும் என்றும் அவர் பதிவிட்டுள்ளார். I. A. Cadir Khan -
( Minuwangoda/Katunayake Corres. )
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/VHkfS5C https://ift.tt/ZEheXmg
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/VMjJdCR
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/k3z6tnP
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/dtJ6W9V
https://ift.tt/5efuqkS
https://ift.tt/5efuqkS
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.