வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 06.2022
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 06.2022
ஆகத்து 6 (August 6) கிரிகோரியன் ஆண்டின் 218 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 219 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 147 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
1284 – பீசா குடியரசு மெலோரியா சமரில் செனோவாக் குடியரசினால் தோற்கடிக்கப்பட்டது. இதன் மூலம் நடுநிலக் கடல் பகுதியில் அதன் செல்வாக்கு வீழ்ச்சியடைந்தது.
1661 – போர்த்துகல்லுக்கும் இடச்சுக் குடியரசுக்கும் இடையில் டச்சு பிரேசில் (வடக்கு பிரேசில்) தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டது.
1806 – கடைசி புனித உரோமைப் பேரரசர் இரண்டாம் பிரான்சிசு நெப்போலியனுடனான போரில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அப்பேரரசு முடிவுக்கு வந்தது.
1812 – இலங்கை விவிலிய சபை கொழும்பு நகரில் ஆரம்பிக்கப்பட்டது.[1]
1825 – பொலிவியா எசுப்பானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
1832 – இலங்கையில் கொழும்பு சேமிப்பு வங்கி ஆரம்பிக்கப்பட்டது.[1]
1861 – ஐக்கிய இராச்சியம் லேகோசு நகரை இணைத்துக் கொண்டது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க கூட்டமைப்பின் அர்கான்சாசு போர்க்கப்பல் மிசிசிப்பி ஆற்றில் மூழ்கியது.
1870 – பிரான்சுடனான இசுப்பிச்செரென், வோர்த் சமர்களில் புருசியா வெற்றி பெற்றது.
1890 – நியூயார்க்கில் மின்சாரக் கதிரை மூலம் முதன் முதலாக வில்லியம் கெம்மியர் என்ற கொலைக்குற்றவாளிக்கு மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
1901 – ஓக்லகோமாவின் கியோவா நிலம் வெள்ளையினத்தவரின் குடியேற்றத்திற்குத் திறந்து விடப்பட்டது.
1914 – முதலாம் உலகப் போர்: செருமனியின் 10 கடற்படைப் படகுகள் பிரித்தானிய அரச கடற்படையைத் தாக்கவென வட கடல் நோக்கிப் புறப்பட்டன.
1914 – முதலாம் உலகப் போர்: செர்பியா செருமனி மீதும், ஆஸ்திரியா உருசியா மீதும் போரை அறிவித்தன.
1926 – கெர்ட்ரூட் எடெர்ல் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் பெண் என்ற சாதனையை ஏற்படுத்தினார்.
1930 – வீரகேசரி நாளிதழ் ஆவணிப்பட்டி பெ. பெரி. சுப்பிரமணியம் செட்டியார் என்பவரால் கொழும்பில் தொடங்கப்பட்டது.
1940 – எசுத்தோனியாவை சோவியத் ஒன்றியம் இணைத்துக் கொண்டது.
1944 – வார்சாவாவில் செருமனிக்கு எதிராக ஆகத்து 1 இல் ஆரம்பமான கிளர்ச்சி முறியடிக்கப்பட்டது. ஏராளமான ஆண்கள் கைது செய்யப்பட்டனர்.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பானின் இரோசிமா நகர் மீது அமெரிக்கா “லிட்டில் பாய்” என்ற பெயரைக் கொண்ட அணுகுண்டை வீசியது. கிட்டத்தட்ட 70,000 பொதுமக்கள் ஒரே நாளில் கொல்லப்பட்டனர். இதன் தாக்கத்தினால் மேலும் பல்லாயிரக்கணக்கானோர் அடுத்த சில ஆண்டுகளில் இறந்தனர்.
1952 – இலங்கைப் பல்கலைக்கழகம் பேராதனைக்கு இடம் மாறியது.
1960 – கியூபப் புரட்சி: அமெரிக்கா கியூபா மீது பொருளாதாரத் தடை விதித்ததை அடுத்து கியூபா தனது நாட்டில் இருந்த அமெரிக்கா மற்றும் வெளிநாட்டு மூலதனங்களை நாட்டுடமை ஆக்கியது.
1961 – வஸ்தோக் 2: முதன்முதலாக ஒரு முழு நாள் மனிதன் விண்வெளியில் இருந்த பெருமையை சோவியத் விண்வெளிவீரர் கேர்மான் டீட்டோவ் பெற்றார்.
1962 – யமேக்கா ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.
1964 – அமெரிக்காவில் நெவாடா மாநிலத்தில் உலகின் மிகப் பழமையான மரமாகக் கருதப்பட்ட 4900 ஆண்டு பழமையான புரொமேத்தியசு என்ற மரம் வெட்டப்பட்டது.
1990 – வளைகுடாப் போர்: குவைத் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக ஈராக் மீது உலகளாவிய பொருளாதாரத் தடையை விதிக்க ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு அவை கோரியது.
1990 – திராய்க்கேணி படுகொலைகள்: இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் திராய்க்கேணி என்னும் இடத்தில் பெண்கள், முதியவர்கள் உட்பட 47 தமிழர்கள் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1991 – உலகளாவிய வலை (WWW) தொடர்பான தனது ஆவணங்களை டிம் பேர்னேர்ஸ்-லீ வெளியிட்டார்.
1996 – செவ்வாயில் இருந்து தோன்றியதாகக் கருதப்படும் ஏ.எல்.எச் 84001 என்ற விண்கல் ஆரம்பகால உயிரினங்கள் பற்றிய தகவலைக் கொண்டிருப்பதாக நாசா அறிவித்தது.
1997 – வட கொரிய போயிங் விமானம் ஒன்று குவாமில் மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த 254 பேரில் 228 பேர் உயிரிழந்தனர்.
2001 – ஏர்வாடி தீ விபத்து: தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர்
2001 – ஏர்வாடி தீ விபத்து: தமிழ்நாடு ஏர்வாடியில் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த 11 பேர் பெண்கள் உட்பட 28 மன நோயாளிகள் தீ விபத்தில் உயிரிழந்தனர்.
2008 – மூரித்தானியாவில் முகமது அப்தல் அசீசு தலைமையில் மேற்கொள்ளப்பட்ட இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் சித்தி ஊல்ட் ஷேக் அப்தல்லாகி பதவியிழந்தார்.
2010 – இந்தியாவில் சம்மு காசுமீர் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் 71 நகரங்கள் பாதிப்படைந்தன. 255 பேர் உயிரிழந்தனர
2011 – ஆப்கானித்தானில் அமெரிக்க இராணுவ உலங்குவானூர்தி ஒன்று சுட்டு வீழ்த்தப்பட்டதில், 30 அமெரிக்க இராணுவத்தினர் உட்பட 38 பேர் கொல்லப்பட்டனர்.
2012 – நாசாவின் கியூரியோசிட்டி தரையுளவி செவ்வாய்க்கோளில் தரையிறங்கியது.
இன்றைய தின பிறப்புகள்
1809 – ஆல்பிரட் டென்னிசன், ஆங்கிலேயக் கவிஞர் (இ. 1892)
1881 – அலெக்சாண்டர் பிளெமிங், நோபல் பரிசு பெற்ற இசுக்கொட்டிய உயிரியலாளர் (இ. 1955)
1909 – கே. எஸ். கோதண்டராமய்யா, ஆந்திரா அரசியல்வாதி (இ. 1984)
1911 – ஜி சியான்லின், இந்திய சீன மொழியியல் அறிஞர் (இ. 2009)
1915 – ஏ. நாகப்பச் செட்டியார், தமிழகத் தொழிலதிபர் (இ. 1982)
1925 – அ. சீனிவாசன், தமிழக இதழாளர், மொழிபெயர்ப்பாளர், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர்
1928 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர் (இ. 1987)
1933 – ஏ. ஜீ. கிறிப்பால் சிங், இந்தியத் துடுப்பாளர் (இ. 1987)
1943 – ஜான் பாஸ்டல், அமெரிக்கக் கணினியியலாளர், கல்வியாளர் (இ. 1998)
1959 – ராஜேந்திர சிங், இந்திய சூழலியலாளர்.
1965 – விசால் பரத்வாஜ், இந்தியத் திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பின்னணிப் பாடகர்.
1970 – எம். நைட் சியாமளன், இந்திய-அமெரிக்கத் திரைப்பட இயக்குநர்.
1983 – இராபின் வான் பெர்சீ, டச்சுக் காற்பந்தாட்ட வீரர்.
இன்றைய தின இறப்புகள்
258 – இரண்டாம் சிக்ஸ்துஸ் (திருத்தந்தை)
1221 – புனித தோமினிக், தொமினிக்கன் சபையை நிறுவிய எசுப்பானியர் (பி. 1170)
1660 – டியேகோ வெலாஸ்க்குவெஸ், எசுப்பானிய ஓவியர் (பி. 1599)
1802 – மயிலப்பன் சேர்வைகாரர், பிரித்தானிய கிழக்கிந்திய கம்பனியை எதிர்த்த தமிழ்ப் போர்வீரர்
1828 – பீட்டர் பாண்டியன், பிரித்தானியக் கிழக்கிந்திய கம்பெனி அலுவலர் (பி. 1785)
1879 – யோகான் வான் இலாமாண்ட், இசுக்காட்டிய-செருமானிய வானியலாளர், இயற்பியலாளர் (பி. 1805)
1925 – சுரேந்திரநாத் பானர்ஜி, இந்திய அரசியல்வாதி (பி. 1848)
1928 – அன்டி வார்ஹால், அமெரிக்க ஓவியர் (இ. 1987)
1951 – ருக்மிணி லட்சுமிபதி, இந்திய அரசியல்வாதி, சென்னை மாகாண முதல் பெண் அமைச்சர் (பி. 1892)
1973 – புல்ஜென்சியோ பாட்டிஸ்ட்டா, கியூபாவின் 9வது அரசுத்தலைவர் (பி. 1901)
1978 – ஆறாம் பவுல் (திருத்தந்தை) (பி. 1897)
1984 – ஆழிக்குமரன் ஆனந்தன், இலங்கையின் நீச்சல் வீரர், வழக்கறிஞர்
2009 – முரளி, மலையாள நடிகர் (பி. 1954)
2011 – பே டெல் முண்டோ, பிலிப்பீனிய மருத்துவர் (பி. 1911)
2012 – பெர்னார்டு உலோவெல், ஆங்கிலேய இயற்பியலாளர், வானியலாளர் (பி. 1913)
2016 – வியட்நாம் வீடு சுந்தரம், தமிழகத் திரைப்பட இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் (பி. 1941)
2019 – சுஷ்மா சுவராஜ், இந்திய அரசியல்வாதி (பி. 1952)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (பொலிவியா, எசுப்பானியாவிடம் இருந்து 1825)
விடுதலை நாள் (ஜமேக்கா பிரித்தானியாவிடம் இருந்து 1962)
அணுகுண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் நினைவு நாள் (இரோசிமா, யப்பான்)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.