வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 25.2022
வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 25.2022
ஆகத்து 25 கிரிகோரியன் ஆண்டின் 237 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 238 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 128 நாட்கள் உள்ளன.
இன்றைய தின நிகழ்வுகள்
766 – பைசாந்தியப் பேரரசர் ஐந்தாம் கான்ஸ்டன்டைன் தனக்கு எதிராக சதியில் ஈடுபட்ட 19 உயர் அதிகாரிகளைத் தூக்கிலிட்டார்.
1270 – பிரான்சின் ஒன்பதாம் லூயி மன்னர் எட்டாவது சிலுவைப் போரில் இருந்த போது தூனிசில் இறந்தார்.
1580 – அல்காண்டரா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் எசுப்பானியா போர்த்துக்கலை வென்றது.
1609 – இத்தாலிய வானியலாளர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை வெனிசில் அறிமுகப்படுத்தினார்.
1630 – இலங்கையில் ரந்தெனிவலைச் சண்டையில் போர்த்துக்கீசப் படையினர் கண்டி இராச்சியப் படையினரால் தோற்கடிக்கப்பட்டனர்.
1732 – யாழ்ப்பாணத்தின் இடச்சுத் தளபதியாக கோல்ட்டெரசு வூல்ட்டெரசு நியமிக்கப்பட்டார்.[1]
1758 – ஏழாண்டுப் போர்: புருசிய மன்னர் இரண்டாம் பிரெடெரிக் உருசிய இராணுவத்தை சோண்டோர்ஃப் என்ற இடத்தில் தோற்கடித்தார்.
1795 – திருகோணமலையை பிரித்தானியர் இடச்சுக்களிடம் இருந்து மீண்டும் கைப்பற்றினர்.[2]
1803 – யாழ்ப்பாணம் பனங்காமப் பற்று மன்னன் பண்டாரவன்னியன் கண்டியர்களின் உதவியுடன் முல்லைத்தீவைத் தாக்கிக் கைப்பற்றினான். விடத்தல் தீவைக் கைப்பற்ற எடுத்த முயற்சி மேஜர் வின்சென்ட் என்பவனால் முறியடிக்கப்பட்டது.[1]
1814 – பிரித்தானிய அமெரிக்கப் போர், 1812: வாசிங்டன் எரியூட்டலின் இரண்டாம் நாளில் பிரித்தானியப் படையினர் அமெரிக்கக் காங்கிரசு நூலகம், அமெரிக்கத் திறைசேரி மற்றும் பல அரச கட்டடங்களுக்குத் தீ வைத்தனர்.
1823 – அமெரிக்க தேடலியலாளர், விலங்கின் மென்மயிர் வணிகர் இயூ கிளாசு தெற்கு டகோட்டாவில் தேடலுக்குச் சென்ற போது கொடுங்கரடியினால் தாக்கப்பட்டார்.
1825 – உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது.
1830 – பெல்ஜிய புரட்சி ஆரம்பமானது.
1875 – ஆங்கிலேயக் கால்வாயை நீந்திக் கடந்த முதல் மனிதர் என்ற சாதனையை மெத்தியூ வெப் பெற்றார்.[3]
1894 – அரையாப்பு நோய்க்கான தொற்றுக் கிருமியை கிடசாடோ சிபாசாபுரோ கண்டுபிடித்தார்.
1898 – கிரேக்கத்தில் துருக்கியக் கும்பலால் 700 பொது மக்கள், 17 பிரித்தானியக் காவலர்கள், கிரீட் நகர பிரித்தானியத் தூதர் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
1914 – முதலாம் உலகப் போர்: சப்பான் ஆத்திரியா-அங்கேரி மீது போர் தொடுத்தது.
1914 – முதலாம் உலகப் போர்: பெல்சியத்தில் உள்ள லியூவென் கத்தோலிக்கப் பலகலைக்கழக நூலகம் செருமனிய இராணுவத்தால் சேதமாக்கப்பட்டதில், ஆயிரகக்ணக்கான நூல்கள், வரலாற்று ஆவணங்கள் அழிக்கப்பட்டன.
1920 – போலந்துக்கும் சோவியத் ஒன்றியத்துக்கும் இடையில் ஆகத்து 13 இல் ஆரம்பித்த போர் செஞ்சேனையினரின் தோல்வியுடன் முடிவுக்கு வந்தது.
1933 – சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் உயிரிழந்தனர்.
1939 – ஐக்கிய இராச்சியமும் போலந்தும் இராணுவ உடன்படிக்கையை ஏற்படுத்தின.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் முதல் தடவையாக பெர்லின் மீது குண்டுகளை வீசியது.
1944 – இரண்டாம் உலகப் போர்: கூட்டுப் படைகளால் பாரிசு விடுவிக்கப்பட்டது.
1945 – இரண்டாம் உலகப் போர்: சப்பான் சரணடைந்து பத்து நாட்கள் கடந்த நிலையில், சீனப் பொதுவுடமைக் கட்சியின் ஆதரவாளர்கள் அமெரிக்க புலனாய்வு அதிகாரிகள் இருவரைக் கொன்றனர். இதுவே பனிப்போரின் முதலாவது கொலைகள் எனக் கருதப்படுகிறது.
1950 – வேலைநிறுத்தத்தைத் தடுக்கும் பொருட்டு அமெரிக்க அரசுத்தலைவர் ஹாரி எஸ். ட்ரூமன் நாட்டின் சாலைகளை இராணுவத்தினரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர உத்தரவிட்டார்.
1955 – கடைசி சோவியத் படைகள் ஆஸ்திரியாவை விட்டு வெளியேறின.1961 – எட்டு மாதங்கள் மட்டுமே பதவியில் இருந்த யானியோ குவாத்ரோசு பிரேசிலின் அரசுத்தலைவர் பதவியில் இருந்து விலகினார்.
1967 – அமெரிக்க நாட்சிக் கட்சியின் நிறுவனர் ஜார்ஜ் ரொக்வெல் அவரது குழுவின் முன்னாள் ஒறுப்பினர் ஒருவனால் கொல்லப்பட்டார்.
1980 – சிம்பாப்வே ஐக்கிய நாடுகள் அவை.யில் இணைந்தது.
1981 – வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது.
1989 – வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக்க் கிட்டவாகச் சென்றது.
1991 – லினசு டோர்வால்டுசு லினக்சு இயக்குதளத்தை அறிமுகப்படுத்தினார்.
1991 – சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது.
2001 – பகாமாசில் இடம்பெற்ற ஒரு விமான விபத்தில் அமெரிக்கப் பாடகி ஆலியாவும் அவரது குழுவினரும் கொல்லப்பட்டனர்.
2003 – மும்பையில் இரண்டு வாகனக் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர்.
2006 – உக்ரைனின் முன்னாள் பிரதமர் பாவ்லோ லசரென்கோ ஊழல் குற்ரச்சாட்டுகளுக்காக 9 ஆண்டுகள் சிறைத்தண்டை பெற்றார்.
2007 – இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர்.
2012 – வொயேஜர் 1 விண்கலம் விண்மீனிடைவெளிக்குச் சென்ற முதலாவது மனிதரால் உருவாக்கப்பட்ட விண்பொருள் என்ற சாதனையை நிலைநாட்டியது.
2017 – 2017 அரியானா கலவரம்: இந்தியாவில் அரியானா மாநிலத்தில் தொடங்கிய வன்முறைகள் பஞ்சாப், புதுதில்லிக்கும் பரவியதில், 36 பேர் உயிரிழந்தனர், 250 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1530 – நான்காம் இவான், உருசியப் பேரரசர் (இ. 1584)
1887 – செல்லப்பா குமாரசுவாமி, இலங்கை அரசியல்வாதி
1903 – அர்பத் எலோ, அங்கேரிய-அமெரிக்க சதுரங்க வீரர், எலோ தரவுகோள் முறையை அறிமுகப்படுத்தியவர் (இ. 1992)
1905 – மரிய பவுஸ்தீனா கோவால்ஸ்கா, போலந்து புனிதர் (இ. 1938)
1906 – கிருபானந்த வாரியார், சமயச் சொற்பொழிவாளர் (இ 1993)
1906 – கிட்டப்பா, நடிகர், பாடகர் (இ. 1933)
1911 – வோ இங்குயென் கியாப், வியட்நாமிய இராணுவத் தலைவர் (இ. 2013)
1929 – எஸ். வரலட்சுமி, தமிழ்த் திரைப்பட நடிகை, பாடகி
1930 – சான் கானரி, இசுக்கொட்டிய நடிகர்
1931 – எம். கே. அர்ஜுனன், கேரளத் திரைப்பட இசையமைப்பாளர்
1938 – பிரெட்ரிக் போர்சித், ஆங்கிலேய ஊடகவியலாளர், எழுத்தாளர்
1945 – ராம் புனியானி, இந்திய உயிரிமருத்துவர்
1952 – விஜயகாந்த், தமிழக நடிகர், அரசியல்வாதி
1952 – துலிப் மென்டிஸ், இலங்கைத் துடுப்பாளர்
1955 – ஹனி இரானி, இந்தியத் திரைப்பட நடிகை
1957 – எம். ஆர். கே. பன்னீர்செல்வம், தமிழக அரசியல்வாதி
1962 – தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர்
1964 – அஸ்மின் அலி, மலேசியக் கணிதவியலாளர், அரசியல்வாதி
1973 – நித்யஸ்ரீ மகாதேவன், கருநாடக இசைப் பாடகி
1976 – ஜாவித் கதீர், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1987 – மோனிகா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இன்றைய தின இறப்புகள்
79 – மூத்த பிளினி, உரோமை இராணுவத் தலைவர், மெய்யியலாளர் (பி. 23)
1636 – பாய் குருதாஸ், பஞ்சாபிக் கவிஞர் (பி. 1551)
1776 – டேவிடு யூம், இசுக்கொட்டியப் பொருளியலாளர், மெய்யியலாளர் (பி. 1711)
1819 – ஜேம்ஸ் வாட், இசுக்கொட்டிய-ஆங்கிலேயப் பொறியியலாளர் (பி. 1736)
1822 – வில்லியம் எர்செல், செருமானிய-ஆங்கிலேய வானியலாளர் (பி. 1738)
1867 – மைக்கேல் பரடே, ஆங்கிலேய இயற்பியலாளர், வேதியியலாளர் (பி. 1791)
1900 – பிரீட்ரிக் நீட்சே, செருமானிய மெய்யியலாளர் (பி. 1844)
1908 – என்றி பெக்கெரல், நோபல் பரிசு பெற்ற பிரான்சிய இயற்பியலாளர் (பி. 1852)
1919 – விக்தர் நோர், செருமானிய-உருசிய வானியலாளர் (பி. 1840)
1938 – அலெக்சாண்டர் குப்ரின், உருசிய நாடுகாண் பயணி (பி. 1870)
1971 – வ. சு. செங்கல்வராய பிள்ளை, தமிழறிஞர் (பி. 1883)
1981 – எஸ். ஏ. விக்கிரமசிங்க, இலங்கை இடதுசாரி அரசியல்வாதி (பி. 1901)
2001 – ஆலியா, அமெரிக்கப் பாடகி, நடிகை (பி. 1979)
2001 – மட்கே ஜெர்ட்ரூடே ஆடம், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1912)
2008 – தா. இராமலிங்கம், ஈழத்துக் கவிஞர் (பி. 1933)
2009 – எட்வர்ட் கென்னடி, அமெரிக்க அரசியல்வாதி (பி. 1932)
2012 – நீல் ஆம்ஸ்ட்றோங், அமெரிக்க விண்வெளி வீரர் (பி. 1930)
2012 – வி. கே. லட்சுமணன், தமிழக அரசியல்வாதி (பி. 1932)
2018 – ஜான் மெக்கெய்ன், அமெரிக்க அரசியல்வாதி (பி. 1936)
இன்றைய தின சிறப்பு நாள்
விடுதலை நாள் (உருகுவை, பிரேசிலிடம் இருந்து 1825)
விடுதலை நாள் (பிரான்சு)
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.