வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30.2022

 வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30.2022

ஆகத்து 30  கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.

இன்றைய தின நிகழ்வுகள்

70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1]

1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.

1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.

1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் உயிரிழந்தனர்.

1799 – இரண்டாவது கூட்டமைப்புப் போரில், நெதர்லாந்தின் முழுக் கடற்படைக் கப்பல்களையும் பிரித்தானியப் படைகள் கைப்பற்றின.

1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.

1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.

1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.

1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.

1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.

1917 – வியட்நாமிய சிறைக் காவலர்கள் உள்ளூர் பிரெஞ்சு அதிகாரிகளை எதிர்த்துக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.

1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.

1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.

1940 – இரண்டாவது வியென்னா உடன்பாட்டின் படி, உருமேனியாவின் வடக்கு திரான்சில்வேனியா பகுதி வின் அங்கேரிக்கு வழங்கப்பட்டது.

1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.

1945 – வியட்நாமில் ஆகத்துப் புரட்சி முடிவுக்கு வந்தது. நியூவென் வம்சத்தின் கடைசிப் பேரரசர் பாபோ டாய் முடிதுறந்தார்.

1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.

1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.

1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் மக்கள் முஜாகுதீன் குழுவினர் நடத்திய குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.

1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.

1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.

1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1991 – ஈழத்துப் பெண்ணிலைவாதியும் கவிஞருமான செல்வநிதி தியாகராசா யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டுக் காணாமல் போனார்.

1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.

1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.

1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

2002 – பிரேசிலில் வானூர்தி ஒன்று ரியோ பிராங்கோ பன்னாட்டு வானூர்தி நிலையத்திற்கு அருகில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 31 பேரில் 23 பேர் உயிரிழந்தனர்.[2]

2008 – ஈழப்போர்: கிளிநொச்சி புதுமுறிப்புப்பகுதியில் இடம்பெயர்ந்த மக்கள் மீது படையினர் நடத்திய எறிகணைத் தாக்குதலில் இரு குழந்தைகள் உட்பட ஐவர் கொல்லப்பட்டு மூவர் காயமடைந்தனர்.

2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.

இன்றைய தின பிறப்புகள்

1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)

1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)

1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)

1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)

1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)

1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)

1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)

1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)

1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)

1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)

1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்.

1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை.

1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்.

1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி.

1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி.

1958 – அன்னா பலிட்கோவ்ஸ்கயா, உருசிய ஊடகவியலாளர், செயற்பாட்டாளர் (இ. 2006)

1963 – ஆனந்த் பாபு, தமிழகத் திரைப்பட நடிகர்.

1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை.

1976 – சித்ராங்கதா சிங், இந்திய நடிகை.

1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை.

1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்.

இன்றைய தின இறப்புகள்

1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)

1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)

1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)

1773 – பேஷ்வா நாராயணராவ், மராத்தியப் பேரரசின் பிரதம அமைச்சர் (பி. 1755)

1844 – பிரான்சிசு பெய்லி, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1774)

1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)

1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)

1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)

1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)

1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)

1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)

1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937)

2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)

2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)

2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)

2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)

2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918)

2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)

2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)

2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)

இன்றைய தின சிறப்பு நாள்

அனைத்துலக காணாமற்போனோர் நாள்

விடுதலை நாள் (தர்தாரிஸ்தான்)

வெற்றி நாள் (துருக்கி)

அரசியலமைப்பு நாள் (துர்கசு கைகோசு தீவுகள்)

லீமா நகர ரோசின் நாள் (பெரு)

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.