பொது மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் நேற்று (01) விடுக்கப்பட்ட எச்சரிக்கை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டள்ளது.
கெஹல்கமுவ ஓயா, மகாவலி, களனி, நில்வலா மற்றும் களுகங்கை ஆகியன சில பிரதேசங்களில் பெருக்கெடுக்கும் மட்டத்தை எட்டியுள்ளதால், அதனை சுற்றியுள்ள மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ நிலையம் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் பல நீர்த்தேக்கங்களின் வான்கதவுகளை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து அரச பாடசாலைகளையும் இன்று (02) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நுவரெலியா பிரதேசத்தில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண ஆளுநர் லலித் யு கமகே தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல பகுதிகளில் இன்று 100 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும் என அதன் பிரதிப் பணிப்பாளர் மெரில் மென்டிஸ் குறிப்பிட்டுள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/Ws8VqlN https://ift.tt/QTj8MVz
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/KJBYkpX
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/3zOpoey
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/I1jlH0P
https://ift.tt/ogQ6kd4
https://ift.tt/ogQ6kd4
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.