ரஞ்சனுக்கு ஜனாதிபதி மன்னிப்பு - பரிந்துரைகள் முன்வைப்பு!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்குவதற்கான பரிந்துரைகளை நீதி அமைச்சு சமர்ப்பித்துள்ளதாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்றுள்ளதாக அமைச்சில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சர் தெரிவித்தார்.
மேலும் அங்கு உரையாற்றிய அவர், இவ்வாறான விடயத்தில் சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற வேண்டிய அவசியமில்லை. கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர் தொடர்பில் சட்டத்தின் பிரகாரம் ஆலோசனை பெற வேண்டும்.
ஆனால் இங்கு வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில், நான் சட்டமா அதிபரின் ஆலோசனையை கேட்டேன். அவர் தொடர்பான சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தின் அறிக்கையையும் பெற்றுக்கொண்டதாகவும் அதில் அனைத்து தகவல்களை கருத்திற்கொண்டு நிபந்தனைக்குட்பட்டு ஜனாதிபதிக்கு பரிந்துரையை சமர்ப்பித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இது பொதுவான வழக்கோ, குற்றமோ அல்ல எனவும் நீதிமன்ற அவமதிப்புக்காக ரஞ்சன் ராமநாயக்க நீண்ட நாட்களாக தண்டனையை அனுபவித்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அவர் நல்ல நடத்தை உடையவர் என்பதாலும் சமூகத்திற்கு சில பங்களிப்பைச் செய்யக்கூடியவர் என்பதாலும் இந்த நேரத்தில் பொதுமன்னிப்பு வழங்குவது மிகவும் நியாயமானது என்று தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/LY7fODP https://ift.tt/Y0djq3T
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/3bYLTz0
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/ZY1qWLH
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/CBdarFU
https://ift.tt/oYgMSLp
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.