பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
பெட்ரோல் - டீசல் விலை குறைப்பு தொடர்பில் வெளியாகிய தகவல்

பெட்ரோல் மற்றும் டீசலின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் என ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ஆனந்த் பாலித தெரிவித்துள்ளார். உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை பீப்பாய் ஒன்றுக்கு 27 அமெரிக்க டொலர்களாக விற்பனை செய்யப்படுவதால் நாட்டிற்கு கொண்டு வரப்படும் அனைத்து எரிபொருளின் விலையும் 70 ரூபாவால் குறைக்க முடியும் என தெரிவித்துள்ளார். எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர அறிமுகப்படுத்திய எரிபொருள் விலை சூத்திரத்திற்கு அமைய கடந்த 15ம் திகதி எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்பட்டிருக்க வேண்டும் எனவும் சுட்டிக்காடினார். உலக சந்தையில் எரிபொருளின் விலை குறைவடைந்திருப்பதால் அதன் பலனை நாட்டு மக்களும் அனுபவிக்க வேண்டும் எனவும் அதற்கமைய எரிபொருளின் விலையை 70 ரூபாவால் குறைக்க முடியும் எனவும் தெரிவித்தார். ஒரு லீட்டர் 95ரக பெட்ரோலுக்கும் சுப்பர் டீசலுக்கும் முறையே 80 ரூபா மற்றும் 67 ரூபா வரி விதிக்கப்படுகிறது. இதே வேளை ஒரு லீட்டர் மண்ணெண்ணையின் விலையை 220 ரூபவாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை பலதரப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை கேள்விக்குறியாக்கும் செயற்பாடு எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/kyjrJ1l https://ift.tt/EXqDtnC 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/AwIKPl2 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/uQxaUST 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/RE8PGC4
https://ift.tt/gKZmu1T

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.