கொரிய வேலைவாய்ப்பு - வௌியான புதிய அறிவிப்பு.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
கொரிய வேலைவாய்ப்பு - வௌியான புதிய அறிவிப்பு. 


தென் கொரியா மீன்பிடித் தொழிலில் வேலை வாய்ப்புக்காக 2022 இல் நடைபெறவுள்ள கொரிய மொழித் தேர்ச்சிப் பரிட்சைக்கான பரீட்சை நுழைவுச் சீட்டுகள் வழங்கும் பணிகள் ஆரம்பமாகியுள்ளது. 

22.08.2022 முதல் 26.08.2022 வரை இணைய வழியில் இந்த நடைமுறை இடம்பெறவுள்ளது. பரீட்சைக்குத் தேவையான நுழைவுச் சீட்டுகள் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.slbfe.lk ஊடாக வௌியிடப்படவுள்ளது.

 2022ஆம் ஆண்டு நடைபெறும் உற்பத்தித் துறையில் மொழித் தேர்ச்சிப் பரீட்சைக்கான பரீட்சை வினாத்தாள்களைப் பெற்ற விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிப்பதற்கான வாய்ப்பில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

 இதற்கு 18-39 வயதுக்கு இடைப்பட்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம், மேலும் நிறக்குருடு இல்லாதவர்கள், சிறையில் அடைக்கப்படாதவர்கள் அல்லது கடுமையான குற்றங்களுக்காக தண்டிக்கப்படாதவர்கள், மேலும் தென் கொரியாவிலிருந்து நாடு கடத்தப்பட்டதற்கான முந்தைய பதிவுகள் எதுவும் இல்லாதவர்களுக்கு இதற்காக விண்ணப்பிக்க முடியும். 

பரீட்சை நுழைவுச் சீட்டுக்களை பெறுவதற்காக, விண்ணப்பப் படிவம், கடவுச்சீட்டின் ஸ்கேன் நகல், 3 மாதங்களுக்குள் எடுக்கப்பட்ட 3.5 cm × 4.5 cm புகைப்படத்தின் ஸ்கேன் செய்யப்பட்ட நகல் மற்றும் பரீட்சைக் கட்டணமாக 10,108 ரூபாய் செலுத்திய பற்றுச்சீட்டு ஆகியவை அவசியம். 

மீன்பிடித் தொழிலில் வேலை செய்வதற்குத் தேவையான மொழித் தேர்ச்சிப் பரீட்சை 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் 5 முதல் நவம்பர் 30 வரை இணைய வழியில் நடைப்பெறும்.

 பரீட்சை மற்றும் பரீட்சை நுழைவுச் சீட்டுகளை வழங்குதல் தொடர்பான மேலதிக தகவல்களை www.slbfe.lk என்ற பணியகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/GRvC4mE https://ift.tt/5ewY7KP 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/2PMkIx1

 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/U8jFyXM 

𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/Dhz4N6S
https://ift.tt/HygsP3C

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.