இலங்கை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இலகு வெற்றி.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இலங்கை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் இலகு வெற்றி.

ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் நேற்று (28) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது. தொடரின் முதல் போட்டியாக இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதிக் கொண்டன. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. துடுப்பட்டத்தில் இலங்கை அணி சார்ப்பில் பானுக ராஜபஷ 38 ஓட்டங்களையும் சாமிக கருணாரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். பந்துவீச்சில் Fazalhaq Farooqi 3 விக்கெட்களை அதிகபட்சமாக வீழ்த்தியிருந்தார். அதனடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணிக்கு 106 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து 106 ஓட்டங்களை பெற்று போட்டியில் வெற்றி பெற்றுள்ளது. துடுப்பாட்டத்தில் Rahmanullah Gurbaz 40 ஓட்டங்களையும் Hazratullah Zazai 37 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/LYMVbRl https://ift.tt/LTNYCAE 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/0bNHweR 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/I5WqbML 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/LUC9RjE
https://ift.tt/2zUW7dJ

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.