கொழும்பில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் ஒருவர் பலி

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 கொழும்பில் துப்பாக்கிச் சூடு - இளைஞர் ஒருவர் பலி

மட்டக்குளி அலிவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் காயமடைந்த நபர் உயிரிழந்துள்ளார். நேற்று (29) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இருவரே துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 26 வயதான ரணவக்க ஆராச்சிலாகே ஹசித சதுரங்க என அழைக்கப்படும் "அலிவத்தே ஹசித" என்பவரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. போதைப்பொருள் தொடர்பில் திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே துப்பாக்கிச் சூட்டுக்கு வழிவகுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். கொழும்பில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி மட்டக்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அலிவத்தை பகுதியில் நேற்று (29) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த சந்தேகநபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்து கைத்துப்பாக்கியை பயன்படுத்தி துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞன் தற்போது சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். போதைப்பொருள் தொடர்பான திட்டமிட்ட குற்றவாளிகளுக்கு இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் சந்தேகம் வெளியிடுளர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/6nBVqtU https://ift.tt/Ui7cCQx 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/36LMmBT 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/1VS5XF9 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/CgAcW0X
https://ift.tt/ofRQnDS

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.