மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
மூடப்படும் நூற்றுக்கணக்கான எரிபொருள் நிரப்பு நிலையங்கள்!
நாட்டில் தற்போது மீண்டும் எரிபொருள் வரிசைகள் அதிகரித்து வருகின்றமை தொடர்பில் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் சங்கத்தின் தலைவர் குமார ராஜபக்ச தகவலொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி பெற்றோலியக் கூட்டுத்தாபனம், காசோலை முறைமையை இடைநிறுத்தியதன் காரணமாக, ஒரே தடவையில் பணத்தை செலுத்தி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியாததாலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், மக்களுக்கான எரிபொருள் தேவை அதிகரித்துள்ளது. காசோலை முறைமை இடைநிறுத்தம் முன்னரை விடவும், அதிகமான எரிபொருளை நேற்று முதல் விநியோகிப்பதாக கனியவளக் கூட்டுத்தாபனம் கூறியுள்ளது. பெற்றோலியக் கூட்டுத்தாபனம், முன்னதாக காசோலை முறைமைக்கு எரிபொருளை விநியோகித்தது. ஆனால், தற்போது, எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முற்பகல் 9.30க்கு முன்னர் பணத்தை செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையம் ஒன்று, எரிபொருளைப் பெற்றுக்கொள்ள நூறு இலட்சம் ரூபாவுக்கும் அதிக பணத்தை செலுத்த வேண்டும். சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அவ்வாறு பணத்தைச் செலுத்த முடியாது. எனவே, நாளாந்தம் 200, 300 எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இவ்வாறான நிலையில், பழைய முறைமைக்கு அமைய, காசோலை வசதியின் கீழ் எரிபொருளை வழங்குமாறு, அமைச்சரிடமும், பெற்றோலியக் கூட்டுத்தாபனத்திடமும் கோருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/MaWJd3S https://ift.tt/R8yAEXO 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/97Vh3DG 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/WZ7g39b 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/SGehkt4
https://ift.tt/9UwoxNd

No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.