பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 பாகிஸ்தான்-ஹாங்காங் அணிகள் இன்று மோதல்

பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். சார்ஜா, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்றுடன் லீக் சுற்று நிறைவடைகிறது. இதில் 'ஏ' பிரிவில் சார்ஜாவில் இன்று நடக்கும் 6-வது ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, நிஜாகத் கான் தலைமையிலான ஹாங்காங்கை எதிர்கொள்கிறது. இவ்விரு அணிகளும் தங்களது முதல் ஆட்டங்களில் இந்தியாவிடம் தோற்று இருந்தது. இந்தியா ஏற்கனவே சூப்பர்4 சுற்றுக்கு முன்னேறி விட்டது. சூப்பர்4 சுற்றுக்கு வரும் இன்னொரு அணி எது என்பது இன்றைய ஆட்டத்தில் தெரிந்து விடும். இந்தியாவுக்கு எதிராக போராடி தோற்ற பாகிஸ்தான், சிறிய அணியான ஹாங்காங்கை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் இந்தியாவுக்கு எதிராக 20 ஓவர் முழுமையாக தாக்குப்பிடித்ததுடன், 152 ரன்கள் வரை எடுத்த ஹாங்காங் அணியினர் பாகிஸ்தானுக்கு கடும் சவால் அளிப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை. பாகிஸ்தான்- ஹாங்காங் அணிகள் சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட்டில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். ஆனால் ஒரு நாள் போட்டியில் 3 முறை மோதியுள்ளன. அனைத்திலும் பாகிஸ்தானே வெற்றி பெற்றிருக்கிறது. ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 👉எமது #Whatsapp குழுவில் இணைய 👇👇👇👇 https://ift.tt/E8H3mX0 https://ift.tt/Ngd49mQ 𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/VRkq5Qw 𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/5xi3qHs 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/ZnAeQct
https://ift.tt/MKrcGuo

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.