மின்சார உதிரிப்பாகங்கள் இறக்குமதித் தடை.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
மின்சார உதிரிப்பாகங்கள் இறக்குமதித் தடை.

மின்சார உதிரிப்பாகங்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விதித்துள்ள கட்டுப்பாடுகள் மற்றும் தடைகள் காரணமாக மக்கள் பல்வேறு அசௌகரியங்களுக்கு ஆளாகிவருகின்றனர். 

குறிப்பாக பழுதடையும் மின்னுயர்த்திகளுக்கான சில உதிரிப்பாகங்களுக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டினால் அவற்றைப் பழுதுபார்க்கமுடியாத நிலையேற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

கொழும்பைப் பொறுத்தமட்டில் பெரும்பாலானோர் உயர்ந்த தொடர்மாடி வீடுகளிலேயே வசித்துவருகின்றனர். குறித்த தொடர்மாடி வீடுகள் 10 தொடக்கம் 35 வரையான மாடிகளைக் கொண்டிருப்பதுடன் மின்னுயர்த்திகள் மூலமாகவே அவற்றை இயக்க வேண்டிய நிலையும் காணப்படுகின்றது.

 தொடர்மாடி வீடுகளில் வசிப்போரின் மின்னுயர்த்திகள் செயலிழந்தாலோ அல்லது மின்சாரம் தடைப்பாட்டாலோ மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியில் வரமுடியாமலும், வெளியிலிருந்து உள்ளே செல்லமுடியாமலும் பெரும் அசௌகரியத்தை எதிர்நோக்குவதைத் தவிர்க்கமுடியாது. 

தொடர்மாடி வீடுகளுக்கு மாத்திரமன்றி, வைத்தியசாலைகள், நட்சத்திர விடுதிள் என அனைத்துக்கும் இதே கதியே ஏற்படும். மேலும் வயோதிபர் மற்றும் நோயாளர்கள் இதனால் வெகுவாகப் பாதிக்கப்படுவார்கள். 

அந்தவகையில் கொழும்பு, கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் அமைந்துள்ள சுமார் 30 குடும்பங்கள் வசிக்கும் தொடர்மாடி ஒன்றில் மின்னுயர்த்தி செயலிழந்ததன் காரணமாக அங்கு குடியிருக்கும் மக்கள் கடந்த ஒரு மாதத்துக்கும் அதிகமான காலம் மிகுந்த சிக்கல்களை எதிர்நோக்கிவருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. 

◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/TPnDF8v https://ift.tt/g9HOXGv 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/5qb1mvS 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/K2P9SZo

 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/5GYEPQR
https://ift.tt/QFn019E

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.