இளம் அணியிடம் நாட்டை ஒப்படையுங்கள்.

𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀 
இளம் அணியிடம் நாட்டை ஒப்படையுங்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இளம் அணியிடம் நாட்டை ஒப்படைக்குமாறு பாராளுமன்றத்தில் நேற்று வேண்டுகோள் விடுத்தார். 

இளம் கிரிக்கெட் அணி நாட்டின் கிரிக்கெட்டை முன்னோக்கி இட்டுச்செல்வதை காண்கின்றோம். அதேபோன்று, நாட்டின் அரசியலையும் இளம் அணியிடம் கையளிக்குமாறு நான் இந்நாட்டு மக்களிடம் இச்சந்தர்ப்பத்தில் வேண்டுகோள் விடுக்கின்றேன் என சாணக்கியன் தனது கோரிக்கையை முன்வைத்தார். 

மாறுபட்ட கோணத்தில் புதிய பயணத்தை இளம் தரப்பினராலேயே மேற்கொள்ள முடியும் என அவர் சுட்டிக்காட்டினார். இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியால் நாட்டு மக்களிடம் போசாக்கின்மை ஏற்படும் நிலையை உருவாக்கி, அதற்கு பொறுப்புக் கூற வேண்டியவர்கள் மீண்டும் ஒரு முறை புதிய அரசியல் நாடகத்தை கடந்த வாரம் ஆரம்பித்துள்ளதாகவும் அத்தகைய நபர்கள் இணைந்து மேலவை இலங்கை கூட்டணி எனும் பெயரில் புதிய கட்சியை உருவாக்கியுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்தார். 

வாளை சுமந்துகொண்டு ‘சிங்க லே’ என கூறியவர் செயலாளராகவுள்ளார். இந்தியாவிடமிருந்து முதலீடு வந்து நாடு ஸ்திரமற்ற நிலையில் இருந்தபோது RAW முகவர் என கூறியவர் செயலாளராக உள்ளார். மலட்டு மாத்திரை கொண்டு வந்ததாக வைத்தியர் சாபியை கூறியவர் உப செயலாளராக உள்ளார். 

IMF-இற்கு சென்றால் நாடு அழிந்துவிடும் என கூறியவர் மற்றுமொரு உப தவிசாளராக உள்ளார். இவ்வாறான ஏமாற்று பேர்வழிகளை மீண்டும் இந்த நாட்டு மக்கள் நம்பக்கூடாது என சாணக்கியன் மேலும் தெரிவித்தார்.

 ◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈ 

👉எமது #Whatsapp குழுவில் இணைய 

👇👇👇👇 https://ift.tt/iZdFX8M https://ift.tt/FLtdJij 

𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/xGyNmLB 

𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/5ptcjkg 𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/awlJ8I3
https://ift.tt/62aS5BZ

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.