இந்தியா அணி அபார வெற்றி!
𝐈𝐍𝐓𝐄𝐑𝐍𝐀𝐓𝐈𝐎𝐍𝐀𝐋 தமிழ் 𝐌𝐄𝐃𝐈𝐀
இந்தியா அணி அபார வெற்றி!
ஆசிய கிண்ண ரி20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அணி 101 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
ஆசிய கிண்ண ரி20 போட்டியின் சூப்பர் 4 சுற்றின் 5 ஆவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை வீழ்த்தி இந்தியா அணி 101 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றிப் பெற்ற நிலையில் முதலில் துடுப்பெடுத்தாட இந்தியா அணிக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 212 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.
இந்திய அணி சார்பில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய விராட் கோஹ்லி தனது முதலாவது ரி20 சதத்தை பதிவு செய்தார். அவர் ஆட்டமிழக்காது 122 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
பதிலுக்கு 213 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை பெற்று 111 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
அவ்வணி சார்பில் இப்ரஹீம் சத்ரன் அதிகபட்சமாக 64 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் புவ்னேஸ்வர் குமார் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார். கே.எல் ராஹுல் 62 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
பந்து வீச்சில் பரீட் அஹமட் இரண்டு விக்கெட்டுக்களை கைப்பற்றினார். இந்த போட்டியில் இந்தியா அணி வெற்றிப் பெற்றிருந்த போதும் இறுதிப் போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
◈ ━━━━━━━ ⸙ 𝐈𝐓𝐌 ⸙ ━━━━━━━ ◈
👉எமது #Whatsapp குழுவில் இணைய
👇👇👇👇 https://ift.tt/Gn0yk12 https://ift.tt/VDr2wWb
𝐓𝐄𝐋𝐄𝐆𝐑𝐀𝐌 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/CeuRBSx
𝐕𝐈𝐁𝐄𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 👇👇👇 https://ift.tt/PV4nLvB
𝐖𝐄𝐁𝐒𝐈𝐓𝐄 👇👇👇 https://ift.tt/FY80UBO
https://ift.tt/wqmWTRu
https://ift.tt/wqmWTRu
No comments
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.
3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்
இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.