முதலை இழுத்துச்சென்ற நபரின் எச்சங்கள் மீட்பு

மாத்தறை, பீக்வெல்ல, நில்வலா ஆற்றுக்கு அருகில் நபர் ஒருவரை முதலை இழுத்துச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் ஒரு பை மற்றும் ஒரு காலணிகள் அந்த இடத்தில் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அதோடு அதன் அருகில் குறித்த நபருடையது என சந்தேகிக்கப்படும் பல உடல் பாகங்களும் காணப்பட்டன.

இந்நிலையில் மீட்கப்பட்ட சடலத்தின் பாகங்கள் மாத்தறை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.

Powered by Blogger.